சரியான உடல்வாகு இல்லையெனில் கண்டிப்பாக கேலி கிண்டலுக்கு ஆளாக வேண்டும் என்பது எழுப்படாத சாசனம். இது நமது ஊர்களில் மட்டுமல்ல, உலகளவில் பொருந்தும். உடல் எடை குறைவாக இருந்தால் "ஒல்லிப்பிச்சான்" என்ற ஒற்றை வரி கிண்டலுடன் முடிந்துவிடும். இதுவே, குண்டாக இருந்தால், உட்கார்ந்தால், நடந்தால், எழுந்தால் என அனைத்திற்கும் வகை வகையாக கிண்டல் செய்து கொன்றுவிடுவார்கள்.
ஆக்லாந்து இளம்பெண்ணான சிமோன் (Simone Pretscherer) என்பவருக்கும் இதே பிரச்சனை தான். இவர் மிகவும் உடல்பருமனுடன் காணப்பட்டதால் இவரை மிகவும் கேலி, கிண்டல்களுக்கு ஆளாக்கியுள்ளனர். ஒருக் கட்டத்தில் வெகுண்டெழுந்த சிமோன் இதற்கு ஒரு தீர்வு கண்டாக வேண்டும் என முடிவு செய்தார்…..
ஆக்லாந்து இளம்பெண் சிமோன் சிமோன் (Simone Pretscherer), இவர் ஆக்லாந்தை சேர்ந்தவர். வயது வெறும் 24 தான். ஆனால், இவரது உடல் எடை இவரை 50 வயது என்பது போன்ற தோற்றமளிக்க செய்தது. இதனால், மற்ற இளைஞர்களாலும், நண்பர்களாலும் நிறைய கேலி கிண்டல்களுக்கு உள்ளாக்கப்பட்டார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் கடைசியாக சிமோன் குண்டாக இருந்து கேலி கிண்டல்களுக்கு ஆளானது கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தான். ஏனெனில், அதன் பிறகு தனது உணவுப் பழக்கத்தில் நிறைய மாற்றங்களும், சீரான உடற்பயிற்சியிலும் இறங்கினர் ஸ்லிம்மாக ஆரம்பித்தார் சிமோன்.
11 மாதத்தில் 86 கிலோ எடை குறைத்த சிமோன் தன்னை கிண்டல் செய்த அனைவரின் வாய்களும் ஆச்சரியப்படும் வகையில் 11 மாதத்தில் 86 கிலோ எடை குறைத்து, ஓர் பெரிய பூட்டு போட்டார் சிமோன். ஏறத்தாழ 169 கிலோவிலிருந்து இப்போது 83 கிலோவிற்கு தனது உடல் எடையை குறைத்துள்ளார்.
கடல் கடந்து உடல் எடை குறித்த சிமோன் ஆக்லாந்தில் இருந்து மூன்று கடல் கடந்து நீச்சல் அடித்துள்ளார் சிமோன். இப்போது ஸ்கை டைவிங் செய்துவருகிறார் (கடந்த ஏப்ரல் மாதம் முதல்). ஆனால், இதற்கெல்லாம் முன்பு, ஆரோக்கியமான உணவு பழக்கமும், சீரான, இடைவிடாத உடற்பயிற்சியும் செய்ததன் பலனே, இன்று தான் மெல்லிய உடல்வாகுடன் இருப்பதற்கு காரணம் என்கிறார் சிமோன்.
24 வயதை ரசிக்க விரும்பினார் அனைவரும் தங்களது இளம் வயதில் நடந்த விஷயங்களை தான், தங்களது முதிய வயதில் நினைத்து ஆனந்தம் கொள்வர். ஆனால், எனது வாழ்கையில் உடல் எடையின் காரணமாக வெறும் கேலியும், கிண்டல்களும் மட்டும் தான் நிறைந்திருந்தது. அதை மாற்றி எனது இளம் வயதை ரசிக்கும்படியாக அமைத்துக்கொள்ள விரும்பினேன். என்று கூறியுள்ளார் சிமோன்.
இணையத்தில் புகைப்படங்கள் பகிர்வு "Simone’s Journey" என்ற தனது ஃபேஸ் புக் அக்கவுண்டில், தனது அனைத்து புகைப்படங்களைய்ம் நாள் வாரியாக பதிவேற்றம் செய்து வந்துள்ளார் சிமோன். இதை சில இணையவாசிகள், இது பொய் என கூறியும், ஃபேக் என கூறியும் வந்துள்ளனர். இதற்கு பதிலாக, உடல் எடையை திடீரென நிறைய குறைத்ததால், இடை பகுதியில் சுருங்கி காணப்பட்ட தனது தோற்றத்தின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் சிமோன்.
கூட்டு நிதி (Crowd Funding) திடீரென அதிகளவில் உடல் எடை குறைத்ததால், சிமோனுக்கு இடை பகுதிகளில் தோல் சுருங்கி காணப்படுகிறது. இதை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய givealittle எனும் இணையத்தின் மூலம் நிதி திரட்டி வருகிறார். இவருக்கு $20,000 தேவை என குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று வரை இந்த கூட்டு நிதி திரட்டலில் 189 பேரின் பங்களிப்பில் $4,745 டாலர்கள் வரை திரட்டப்பட்டுள்ளது.
நினைத்தால் முடியும் சாதித்த சிமோன் நினைத்தால் எதை வேண்டுமானாலும் முடித்துக் காட்டலாம் என, தனது உடல் எடையை 11 மாதத்தில் 86 கிலோ வரை குறைத்து அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார் சிமோன். கவனம் சிதறாமல் சரியான உணவு பழக்கமும், உடற்பயிற்சியும் கடைப்பிடித்து வந்தால் உடல் எடை எவ்வளவு இருந்தாலும் குறைக்கலாம் என சாதித்துள்ளார் சிமோன்.