26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
201612021503303776 Women do not want dating this type of men SECVPF
மருத்துவ குறிப்பு

பெண்கள் எந்த வகை ஆண்களுடன் டேட்டிங் செய்ய விரும்புவதில்லை

ஆண்களில் சில வகையானவர்களை டேட் செய்ய பெண்களுக்கு விருப்பம் இருப்பதில்லை. அதற்கான காரணத்தை கீழே பார்க்கலாம்.

பெண்கள் எந்த வகை ஆண்களுடன் டேட்டிங் செய்ய விரும்புவதில்லை
டேட்டிங் என்றால் உடனே காதலுக்கு முன்னே நெருங்கி பழகும் சமாச்சாரமாக பலர் கருதுகின்றனர். ஆனால், டேட்டிங் என்பது திருமணத்திற்கு முன்பு பெண் பார்க்க போவது போல, காதலுக்கு முன் பழகி பார்ப்பது. இவர்கள் நமக்கு செட் ஆவார்களா? ஆகமாட்டர்களா? என்பதை அறிவது.

டேட்டிங் செய்ய விருப்பமாக இருந்தாலும், ஆண்களில் சில வகையானவர்களை டேட் செய்ய பெண்களுக்கு விருப்பம் இருப்பதில்லையாம்…

நான் இதுவரைக்கும் யாரை பார்த்தும் கல்யாணம் பண்ணிக்கலாம் என்று யோசிச்சதே இல்ல. உன்னை பாக்குற வரைக்கும்.." என்று டயலாக் விடும் ஆண்களை பெண்கள் டேட்டிங் செய்ய விரும்புவதில்லை. இவர்கள் எல்லாரிடமும் இப்படி தான் கூறுவார்கள் என பெண்கள் எண்ணுகின்றனர்.

நான் மிகவும் ஜோவியலாக பழகக் கூடிய நபர், சோசியல் பர்சன் என்ற பெயரில், உடன் இருக்கும் போதெல்லாம் யாருடனாவது போனில் பேசிக் கொண்டிருக்கும் நபருடன் டேட்டிங் போக பெண்கள் விரும்பிவதில்லை.

எதற்கெடுத்தாலும் ஏதோ ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு பதில் எழுதுவது போல மிகவும் யோசித்து, தயங்கி தயங்கி பேசும் ஆண்களை டேட்டிங் செய்ய பெண்கள் விரும்புவதில்லை.

டேட்டிங் செய்ய வேண்டும் என்றால் அந்த ஆண் மிக ரிச்சாக இருக்க வேண்டும் என்றெல்லாம் பெண்கள் ஆசைப்படுவதில்லை. டேட்டிங் என்பது பார்த்ததும் பழகி பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் நபராக இருக்க வேண்டும் என்கின்றனர் பெண்கள்.

பணிவான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும். ஆனால், அதற்காக எல்லாவற்றுக்கும் அடங்கி போகும் ஆண்களை பெண்கள் நேசிப்பதில்லை. கோபப்பட வேண்டிய இடத்தில் கோபப்பட வேண்டும், ஆண் ஆணாக நடந்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

தான் இதையெல்லாம் சாதித்துள்ளேன், நான் இதை எல்லாம் வென்றுள்ளேன் என தற்பெருமை அடிக்கும் ஆண்களை டேட்டிங் செய்ய பெண்கள் விரும்புவதில்லை. இவர்கள் பெண்களை தங்களுக்கு கீழ் இருக்கும்படி பார்ப்பார்கள் என பெண்கள் கூறுகின்றனர். எனவே இத்தகைய ஆண்களுடன் டேட்டிங் போக பெண்கள் விரும்புவதில்லை.

எல்லாவற்றிலும் கணக்கு பார்த்து ஒரு ப்ரோக்ராம் செய்த கணினி போல வாழ்க்கை நடத்தும் ஆண்களை டேட் செய்ய பெண்கள் விரும்புவதில்லை. இவர்கள் பணத்தை மட்டும் தான் பார்ப்பார்கள், சந்தோசமாக இருக்க மாட்டார்கள் என பெண்கள் கூறுகின்றனர்.201612021503303776 Women do not want dating this type of men SECVPF

Related posts

கல்லை கரைக்கும் மூலிகைகள் (விரைவாக -மூன்றே நாளில் )-படங்களுடன்

nathan

தண்ணீர் குடிக்கும் போது இதையும் கவனத்தில் கொள்கிறீர்களா?…

sangika

நெல்லிக்காயினால் கிடைக்கும் அழகு

nathan

உணவை வேக வேகமா சாப்பிடுறீங்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

வயிற்று புண்களுக்கு மருந்தாகும் உருளைக் கிழங்கு

nathan

45 வயதை கடக்கும் பெண்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த இலையின் சாறை மட்டும் தடவினாலே தேமல் மறைந்துபோகுமாம்?

nathan

கர்ப்பிணிகள் சுடுதண்ணீரில் குளித்தால் கருச்சிதைவு ஏற்படுமாம்…

nathan

பெண்களை அதிகம் தாக்கி வரும் ரத்த அழுத்தம்

nathan