31.1 C
Chennai
Monday, Jun 24, 2024
201612020906557345 white chana Salad SECVPF
சாலட் வகைகள்

சுவையான சத்தான கொண்டை கடலை சாலட்

கொண்டை கடலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. கொண்டை கடலையை வைத்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம்.

சுவையான சத்தான கொண்டை கடலை சாலட்
தேவையான பொருட்கள் :

வெள்ளை கொண்டை கடலை – 1/4 கிலோ
கேரட் – 1
வெங்காயம் – 3
தக்காளி – 3
எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
வெள்ளரிக்காய் – 1
உப்பு – தேவையான அளவு
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை – சிறிதளவு
சாட் மசாலா [ Chaat Masala] – 1 தேக்கரண்டி

செய்முறை :

* கேரட்டை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.

* வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

* வெள்ளரிக்காய், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கொண்டை கடலையை எட்டு மணி நேரம் ஊறவைத்து ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து குக்கரில் குழையாமல் வேக வைத்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் வெங்காயம், கொண்டை கடலை, உப்பு, மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும்.

* அடுத்து அதில் துருவிய கேரட், நறுக்கிய வெள்ளரி, கொத்தமல்லி தழை, தக்காளி, சாட் மசாலா [Chaat Masala] சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

* சுவையான சத்தான கொண்டை கடலை சாலட் ரெடி. 201612020906557345 white chana Salad SECVPF

Related posts

பூசணிக்காய் பழ ஷேக்

nathan

கேரட் சாலட் செய்வது எப்படி

nathan

குழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தயிர் பச்சடி

nathan

கொய்யா பழ துவையல்

nathan

பேபி உருளைக்கிழங்கு தயிர் சாலட்

nathan

வாழைத்தண்டு – மாதுளை ரெய்தா

nathan

சிம்பிள் & ஹெல்த்தி சாலட்ஸ்

nathan

இஞ்சி தயிர் பச்சடி செய்வது எப்படி

nathan

சுவையான சத்தான வல்லாரைக் கீரை சாலட்

nathan