28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
1
மருத்துவ குறிப்பு

பெண்களே மாத பட்ஜெட்டை சிறப்பாக பராமரிக்க 5 டிப்ஸ்

ஒரு வீட்டின் செயல்பாடுகள் நெறிப்படுத்தப்பட்ட முறையில் இருந்திட திட்டமிடுவது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். சில விதிவிலக்குகளை தவிர, பெரும்பாலும் திட்டமிடப்படாத எந்த ஒரு காரியமும் சரியாக செயல்படுவதில்லை. இது குடும்பம் நடத்துவதற்கும் கண்டிப்பான ஒன்றாகும்.

திட்டமிடாமல் செயல்படும் குடும்பங்கள் ஒரு கட்டத்தில் பல அவதிக்கு உள்ளாவார்கள். அதனால் நிதி சார்ந்த திட்டங்களை முறையாக சிந்தித்து தீட்டினால், அது அந்த குடும்பத்திற்கு பெரியளவில் கை கொடுக்கும். ஒரு குடும்பத்தை ஒரு ஆளாக நடத்தி விட முடியாது. என்ன தான் கணவன் சம்பாதித்து போட்டாலும், வீட்டை நிர்வாகம் செய்ய மனைவி தேவை தானே.

அதனால் தான் சொன்னார்கள் இரண்டு கைகளும் தட்டினால் தான் ஓசை எழும் என்று. ஆம், ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி என கூட்டு முயற்சியை மேற்கொண்டால் தான் இரட்டை மாடு பூட்டிய வண்டி போல் அந்த குடும்பம் சரியாக நடைபோடும். அதனால் சேமிப்பு என வரும் போது, கூட்டாக அமர்ந்து நிதி ரீதியாக உங்கள் குறுகிய கால மற்றும் நீண்ட கால தேவைகளை பட்டியலிட்டு கொள்வது நல்லதாகும். சரி, அதற்கு உங்கள் மாத பட்ஜெட்டை எப்படி சிறப்பாக திட்டமிடலாம் என்பதை பற்றி வேகமாக பார்க்கலாமா?

மாத பட்ஜெட்டை சிறப்பாக பராமரிக்க 5 டிப்ஸ்……

1. சம்பளம் வந்தவுடன், ஏ.டி.எம்மில் இருந்து சம்பள பணத்தை எடுக்கும் முன்பு, அந்த மாதத்திற்கு உங்களுக்கான செலவுகளை எல்லாம் முதலில் பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். அது வீட்டு ஈ.தவணையாக இருக்கலாம் அல்லது பிற முதலீட்டு கடமைகளாக இருக்கலாம்.

2. எப்போதுமே கொஞ்சம் எக்ஸ்ட்ரா தொகையை (மாதம் ரூ.500/- என்ற வீதத்தில் ஒதுக்கினாலே போதும், சில மாதங்களில் நல்ல பலனை அளிக்கும்) ஒதுக்கி வைத்து கொள்ளுங்கள். இதனால் இன்ஷூரன்ஸ் ப்ரீமியம் போன்றவைகளை கட்டும் தேவை ஏற்பட்டால், கையில் அதிகமாக பணம் இருக்கும் அல்லவா.

3. குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் கல்வி ரீதியான செலவுகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள். அதே நேரம், மாத செலவுகளை பற்றியும் யோசித்துக் கொள்ளுங்கள்.

4. சந்தையில் அளிக்கப்படும் சலுகைகளால் மயங்கி விடாதீர்கள். எந்த பொருளும் அத்தியாவசியமாக தேவைப்படாத பட்சத்தில் அதனை சும்மா வேடிக்கை மட்டும் பார்த்தாலே போதும். மனதை அலை பாய விடாதீர்கள்.

5. உங்கள் சுற்றுலாவை முன் கூட்டியே திட்டமிட்டு விடுங்கள். இதனால் விமான அல்லது இரயில் பயண சீட்டு செலவுகளுக்கு முன் கூட்டியே சேமிக்கலாம் அல்லவா? இது ஊக்கமளிக்கும் வகையிலும் அமையும். சேமிக்கும் வேளையில் வாழ்க்கையையும் மகிழ்ந்திடுங்கள்.
1

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பித்தப்பை பிரச்சனைகளுக்கு 10 பிரம்மாதமான தீர்வுகள்!!

nathan

கோவைக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் அருமையான பலன்கள்!!

nathan

மார்பக புற்று நோய்ப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!!இதை படிங்க…

nathan

குண்டான பெண்களை விரும்பும் ஆண்கள்

nathan

அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மனிதர்களுக்கு கிறுக்கு பிடிப்பது ஏன் என்று தெரியுமா?

nathan

பெண்களே இறுக்கமான உள்ளாடை அணிபவரா நீங்கள்?

nathan

வளரிளம் பருவத்தில் பெண்களுக்கு உண்டாகும் நோய்கள் ஏராளம்

nathan

உங்களுக்கு சளி தொல்லையா..? மூக்குக்கு மேலே இதை தடவினால் போதும் சட்டுனு சரியாயிரும்.!!

nathan

காதலனை பேஸ்புக்கில் ஃபிரண்டா வச்சுக்கிறது, நமக்கு நாமே வச்சுகிற ஆப்பு! ஏன் தெரியுமா?

nathan