29.4 C
Chennai
Thursday, Jul 17, 2025
ld4437
மருத்துவ குறிப்பு

இரவினில் வியர்ப்பது ஆபத்தா?

மகளிர் மட்டும்

பகல் பொழுதுகளில் வியர்ப்பது இயற்கை. சில பெண்களுக்கு இரவில்தான் அதிகமாக வியர்க்கும். சமையலறை வெப்பம், வீட்டின் காற்றோட்டமற்ற சூழல், உடையின் தன்மை போன்றவற்றின் காரணமாக இரவில் வியர்ப்பது சாதாரணமானது. “எந்தக் காரணமும் இல்லாமல், உடையும், படுக்கையும் நனைகிற அளவுக்கு உங்களுக்கு வியர்த்துக் கொட்டுகிறது என்றால் அதை சாதாரணம் என அலட்சியப்படுத்தக் கூடாது” என்கிறார் மருத்துவர் நிவேதிதா. இரவு நேர அதீத வியர்வைக்கான காரணங்களைப் பற்றிப் பேசுகிறார் அவர்.

மெனோபாஸ்…

மெனோபாஸ் வயதில் இருக்கும் பெண்களுக்கு அதன் முக்கியமான அறிகுறிகளில் ஒன்று இப்படிப்பட்ட இரவு நேர வியர்வை. உடல் முழுக்க சூடாவது போன்று உணர்வார்கள். அதன் தொடர்ச்சியாக அதீத வியர்வையும் இருக்கும். இது பயப்படக் கூடியது அல்ல.

இடியோபதிக் ஹைப்பர்ஹிட்ரோசிஸ் (Idiopathic hyperhidrosis) என்கிற பிரச்னை சிலருக்கு இருக்கலாம். இதில் உடலானது கண்டுபிடிக்கும்படியான எந்தவித மருத்துவக் காரணங்களும் இல்லாமல் தானாகவே அதிகளவு வியர்வையை சுரந்து கொண்டே இருக்கும்.

தொற்றுகள் ஏற்படுவதும் ஒரு காரணம். குறிப்பாக டி.பி. தொற்றுக்கும் இந்த இரவு நேர வியர்வைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அது தவிர இதய வால்வுகளிலும் எலும்புகளிலும் வீக்கத்தை ஏற்படுத்துகிற பாக்டீரியா தொற்று மற்றும் சீழ் பிடித்தல் போன்றவையும் இரவு நேரத்தில் வியர்வையை ஏற்படுத்தக்கூடும். இரவு நேர வியர்வைக்கு ஹெச்.ஐ.வி. தொற்று இருப்பதும் ஒரு காரணம்.

சில வகை புற்றுநோய்களின் ஆரம்ப அறிகுறியாகவும் இரவு நேர வியர்வை இருப்பது உண்டு. நிணநீர் சுரப்புப் புற்றுநோயின் முக்கிய அறிகுறி இது. திடீர் எடைக்குறைவு, காய்ச்சல் போன்றவற்றோடு இந்த வியர்வையும் இருப்பவர்கள் புற்றுநோயாக இருக்குமோ என சோதித்துக் கொள்வது சிறந்தது.

மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்வோருக்கு இத்தகைய வியர்வை சகஜம். இந்த மருந்துகளை எடுத்துக் கொள்வோரில் 8 முதல் 22 சதவிகிதம் பேருக்கு இந்தப் பிரச்னை இருப்பதாகச் சொல்கிறார்கள். மனநலத்துக்காக எடுத்துக் கொள்கிற வேறு சில மருந்துகளும் இதே விளைவை ஏற்படுத்தலாம். காய்ச்சலைத் தணிக்க எடுத்துக் கொள்கிற சில மருந்துகளின் விளைவாகவும் இரவு நேரவியர்வையை உணரலாம்.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும் போதும் வியர்க்கும். இன்சுலின் மற்றும் நீரிழிவு மருந்துகள் எடுத்துக் கொள்வோருக்கு இரவில் திடீரென சர்க்கரை அளவு குறைந்து, அதிக அளவில் வியர்க்கும்.

ஹைப்பர் தைராய்டிசம் உள்ளிட்ட சில வகை ஹார்மோன் கோளாறுகளின் காரணமாகவும் உடல் சூடாவதும், இரவில் வியர்ப்பதும் இருக்கும்.

பக்கவாதம், தன்னாட்சி நரம்பியக்கத் தடை பிரச்னை உள்ளிட்ட நரம்பு மண்டலக் கோளாறுகள் இருப்பவர்களுக்கும் எப்போதுமே வியர்வை அதிகமாகவும், இரவில் மிக அதிகமாகவும் இருக்கும்.எனவே, அதீத வியர்வையை உடல்வாகு என்று அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.ld4437

Related posts

சூப்பர் டிப்ஸ்! பெண்களே வெள்ளைபடுதல் குணமாக இதோ அருமையான பாட்டி வைத்தியம்..!

nathan

இல்லறம் இனிக்க கணவரிடம் பெண்கள் எதிர்பார்ப்பது

nathan

உங்களுக்கு தெரியுமா வெற்றிலை போடுவதற்கு மிச்சிய மருத்துவம் இல்லை!

nathan

தினமும் காலையில் இதனை ஊறவைத்து சாப்பிடுவது ஆண்களின் மலட்டுதன்மையை போக்குமாம்…

nathan

கர்ப்பம் தரிக்க சரியான வயது என்ன?

nathan

உங்களுக்கு தெரியுமா சுண்டைக்காயின் அற்புத மருத்துவக் குணங்கள்!

nathan

குழந்தை பிறக்கும் தேதி தள்ளிப்போனால் என்னாகும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

கசகசாவில் இருக்கும் வியக்கத்தக்க டாப் 5 மருத்துவ குணங்கள்!!!

nathan

எனது மார்பகக்காம்புகளிலிருந்து சில மாதகாலமாக பால் போன்ற திரவம் வெளியேறுகின்றது. இதற்கு என்ன காரணமாக …

nathan