28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
201611280831022026 drumstick leaves simple method of medicine SECVPF
மருத்துவ குறிப்பு

முருங்கைக்கீரையின் எளிய முறை மருத்துவம்

ஒரு நபர் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று சொன்னால் மிக எளிமையாக கீரையை வைத்து குறைக்க முடியும்.

முருங்கைக்கீரையின் எளிய முறை மருத்துவம்
பலருக்கு இந்த முருங்கைக்கீரையை சாப்பிட்டால் வயிறு வலிக்கும், பேதியாகிறது என்று சொல்லக்கூடிய சில பக்கவிளைவுகள் உண்டு. அதற்கான காரணம் என்னவென்றால் அளவுக்கு அதிகமான இரும்புச்சத்தும், அளவுக்கு அதிகமான கால்சியமும் முருங்கைக்கீரையில் இருப்பதால் ஒரு சிலருக்கு இந்த முருங்கைக்கீரை செரியாமை என்பதைக் கொண்டு வந்து கழிச்சலை உண்டாக்கும்.

எந்தக் கீரையாக இருந்தாலும் இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது என்று சொல்வதற்குக் காரணம் என்னவென்றால், எல்லா கீரைகளையுமே பார்க்கும் பொழுது மந்தமான தன்மை உடையது, எளிதில் கீரை செரிமானமாகாது, ஆனால் மிக எளிய உணவு. ஒரு நபர் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று சொன்னால் மிக எளிமையாக கீரையை வைத்து குறைக்க முடியும்.

காலையில் முருங்கைக்கீரையை மட்டுமே கடைந்து சாப்பிடுவது அல்லது வெறும் முருங்கைக்கீரையை சூப் மாதிரி செய்து வைத்துக்கொண்டு வேறு ஏதாவது பப்பாளிப்பழம் அல்லது கொள்ளை அவித்து சிறிதளவு அதாவது காலையில் முருங்கைக்கீரை சூப்பும் கொள்ளு சிறிதளவும் அல்லது முருங்கைக்கீரை சூப்பும் பப்பாளியும் மாலையில் மறுபடியும் முருங்கைக்கீரை சூப் இரவு நேரத்தில் ஒரு சிற்றுண்டி என்று இந்த மாதிரி ஒரு உணவுப்பழக்கத்தைத், தொடர்ந்து ஒரு மாதம் இரண்டு மாதம் பழக்கப்படுத்துகிற பொழுது கண்டிப்பாக உடல் எடை குறையும். ஏனென்றால் குறைவான கலோரி உள்ளது.

6 நூறு கிராம் முருங்கைக்கீரையை எடுத்தீர்கள் என்றால் கண்டிப்பாக அதில் இருக்கக்கூடிய கலோரியின் அளவைப் பார்த்தோம் என்றால் கிட்டத்தட்ட 60 கலோரி இருக்கும். ஆனால் நாம் சாப்பிடக்கூடிய ஒரு இட்லிக்கு 60 கலோரி உண்டு. நாம் சாதாரணமாக 6 இட்லி சாப்பிட்டோம் என்றால் மொத்தமாக 360 கலோரி வரும்.

அதற்கு நான்கு வகையான சட்னி சேர்ப்போம் அதிலிருந்து ஒரு கலோரி கிடைக்கும், அடுத்து அந்த சட்னியில் சேர்க்கப்பட்ட எண்ணெயின் தரத்திற்கு தகுந்தவாறு எண்ணெயில் ஒரு கலோரி இருக்கும். இம்மாதிரி இருப்பதனால் அது உடலுக்கு ஏற்ற ஆரோக்கியமான உணவாக கருத இயலாது. ஏனென்றால் இட்லியில் இருக்கக்கூடிய அமிலத்தன்மை, எண்ணெயில் இருக்கக்கூடிய கொழுப்புத்தன்மை, பிறகு சட்னியில் சேர்க்கப்பட்ட காரத்தன்மை, மாவின் புளிப்புத்தன்மை இப்படி எல்லாமே சேருகிறது. நான்கு இட்லி சாப்பிட்டால்கூட கீழே இருக்கக்கூடிய வயிறு நெஞ்சுக்கு வரக்கூடிய சூழலை நாம் அனுபவிக்கிறோம்.201611280831022026 drumstick leaves simple method of medicine SECVPF

Related posts

மார்பக விரிவாக்க க்ரீம் மற்றும் திரவ மருந்துகள் =தெரிந்துகொள்வோமா?

nathan

மாத்திரைகள் உட்கொள்ளும்முறை எது சரி. எது தவறு?

nathan

தாய்ப்பால் சுரக்கலையா? தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கணுமா?இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க..!

nathan

இந்த பகுதியில் வலி ஏற்பட்டால் கவனமாக இருக்கவும்

nathan

நீங்களும் முயற்சி செய்யுங்கள் ! செரிமான பிரச்சனைகளைத் தடுக்க ஆயுர்வேதம் சொல்லும் சிறப்பான வழி!!!

nathan

பண்டிகை காலத்தில் ஷாப்பிங் செல்லும் போது கவனிக்க வேண்டிவை

nathan

உங்களுக்கு ரெட்டை குழந்தை எப்படி உருவாகும்னு தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

முட்டுக்கட்டை போட்டும் தயக்கமும், பயமும்

nathan

இயற்கை வைத்தியத்தில் உள்ள ஓர் வித்தியாசமான வைத்தியம்

nathan