என்னென்ன தேவை?
உளுத்தம்பருப்பு – 1 கப்,
மிளகு – 1 டீஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – பொரிக்க.
எப்படிச் செய்வது?
உளுத்தம்பருப்பை தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்து மிக்ஸியில் போட்டு மிளகு, சீரகம், உப்பு சேர்த்து சற்று கரகரப்பாக அரைக்கவும். ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கவும். மாவை சிறிய உருண்டைகளாக்கி ஒரு இலையிலோ அல்லது கவரிலோ வைக்கவும். மேலே சிறிய கிண்ணம் கொண்டு அழுத்தம் கொடுக்கவும். இதனால் ஒரே சீராக வடை மெல்லியதாக தட்டினால் போல் வரும். வடைகளை மெதுவாக எடுத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வடை மாலை செய்ய உகந்த வடை, பிரசாதமாக வழங்கலாம்.