201611241424120127 chilli chicken kulambu SECVPF
அசைவ வகைகள்

சூப்பரான சில்லி சிக்கன் குழம்பு

சில்லி சிக்கன் பிரையை போல் சில்லி சிக்கன் குழம்பு செய்வது மிகவும் சுலபமானது. அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சூப்பரான சில்லி சிக்கன் குழம்பு
தேவையான பொருட்கள் :

சிக்கன் – ½ கிலோ
தயிர் – ½ கப்
பூண்டு – 6 பல்
குடைமிளகாய் – 2
பச்சை மிளகாய் – 2
தக்காளி – 1
வெங்காயம் – 1
கொத்தமல்லி – சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – 1½ தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

* முதலில் சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கன், தயிர் அரை தேக்கரண்டி, உப்பு, மஞ்சள்த்தூள் போட்டு நன்றாக கலந்து பிரிட்ஜில் அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, குடைமிளகாயை நறுக்கிக்கொள்ளவும்.

* பச்சைமிளகாயை நீளவாக்கில் கீறவும்.

* பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காயவிட்டு அதில் வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.

* வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதனுடன் பிரிட்ஜில் ஊற வைத்த சிக்கனை போட்டு ஐந்து நிமிடங்கள் வரை வதக்கவும்.

* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* தக்காளி வதங்கியதும் மிளகாய்த்தூள் சேர்த்து கிளறவும்.

* தொடர்ந்து 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

* சிக்கன் பாதியளவு வெந்தவுடன் குடைமிளகாயைச் சேர்க்கவும்.

* சிக்கன் நன்றாக வெந்தவுடன் குழம்பில் நறுக்கிய பூண்டு, கரம் மசாலாத்தூள் 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

* கடைசியாக கொத்துமல்லி தூவி இறக்கவும்.

* சுவையான சில்லி சிக்கன் குழம்பு தயார்.201611241424120127 chilli chicken kulambu SECVPF

Related posts

ஆட்டு ஈரல் பிரட்டல் செய்ய தெரியுமா….?

nathan

இலங்கை ஸ்டைல் சிக்கன் குழம்பு

nathan

மட்டன் சுக்கா வறுவல்

nathan

சென்னை மட்டன் தொக்கு

nathan

சுவையான ஆந்திரா ஸ்டைல் க்ரீன் சில்லி சிக்கன்

nathan

சுவையான வஞ்சிரம் மீன் கிரேவி

nathan

ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி

nathan

நாசிக்கோரி

nathan

சூப்பரான மட்டன் கடாய்

nathan