உடல்நல பாதிப்பில்லாத வாழ்க்கைக்கு, ஆரோக்கியமான உணவுகளுடன், சீரான உடற்பயிற்சியும் அவசியம்.
உடற்பயிற்சியின் உண்மைகள்
உடல்நல பாதிப்பில்லாத வாழ்க்கைக்கு, ஆரோக்கியமான உணவுகளுடன், சீரான உடற்பயிற்சியும் அவசியம்.
பல வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்பவர்கள், தங்களுக்கு தனியாக உடற்பயிற்சி எதுவும் தேவையில்லை என்று எண்ணுகிறார்கள்.
அது சரியல்ல. உடல் முழுவதும் உள்ள தசைகளும், எலும்புகளும் இயங்கும் விதத்தில் சீரான உடற்பயிற்சி செய்வது கட்டாயம்.
இதற்கு, காலை, மாலை வேளையில் நடைப்பயிற்சி, நீச்சல் போன்றவற்றில் ஈடுபடலாம். குறிப்பாக நடுத்தர வயதினர், 10 நிமிடங்கள் நடக்க ஆரம்பித்து, பின்னர் அதை சிறிது சிறிதாக அதிகரிக்கலாம்.
அதேநேரம், காலை அல்லது மாலை வேளையில் உணவுக்கு முன்பாக பயிற்சியை முடித்துவிட வேண்டும். பயிற்சியை முடித்தவுடன் தண்ணீர் குடிப்பதும், குளிப்பதும் சரியல்ல. கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஓய்வெடுத்து, உடல் வெப்பநிலை சீரான பின்புதான் குளிக்கவேண்டும்.
மேலும் 45 வயதைக் கடந்தவர்கள் முதுகை அதிகம் வளைக்கும் யோகாசனப் பயிற்சிகளைத் தவிர்த்து, மிதமான ஆசனங்களைச் செய்யவேண்டும்.
உணவு சாப்பிடும் விஷயத்திலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வறுத்த, பொரித்த உணவுகளை குறைந்த அளவில் மட்டும் சாப்பிடலாம். அடிக்கடி அவற்றைச் சாப்பிடவும் கூடாது. முட்டையில் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு, வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடுங்கள்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம், மலச்சிக்கலைத் தவிர்க்கலாம். சர்க்கரை நோயாளிகள் ஒரு நேரம் மட்டும் அளவோடு சாதம் சாப்பிடலாம். மற்ற நேரங்களில் சப்பாத்தி போன்றவற்றைச் சாப்பிடுவது தகும்.
சுவைக்கு அடிமையாகி மீன், இறைச்சி உணவுகளை வறுத்துச் சாப்பிடுவதற்குப் பதில் குழம்பாக வைத்துச் சாப்பிடலாம்.
உடற்பயிற்சி என்பது எப்போதோ ஒருமுறை செய்வது அல்ல, தினசரி கடைப்பிடிக்க வேண்டியது என்பதை உணர்ந்து செயல்படலாம்.