26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
sl4101
சிற்றுண்டி வகைகள்

ரவை சர்க்கரைப் பொங்கல்

என்னென்ன தேவை?

ரவை லேசாக வறுத்தது – 1 கப்,
பாசிப்பருப்பு லேசாக வறுத்து கரகரப்பாக பொடித்தது – ½ கப்,
குங்குமப்பூ – ஒரு சிட்டிகை பாலில் ஊற வைத்தது,
நெய் – 4 டேபிள் ஸ்பூன்,
உடைத்த முந்திரி – ¼ கப்,
திராட்சை – 10-12,
சர்க்கரை – 1½ கப்,
ஏலக்காய்த்தூள், உப்பு – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து எடுக்கவும். பின் அதே கடாயில் ரவையை வறுத்து தனியே வைக்கவும். பாசிப்பருப்பை வேக வைத்து கொள்ளவும். கடாயில் 3 கப் தண்ணீர் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பை போட்டு கொதி வந்ததும் ரவையை சேர்க்கவும். அது பாதி வெந்ததும் நெய் சேர்க்கவும். அத்துடன் வெந்த பாசிப் பருப்பு, ஏலக்காய் சேர்த்து வெந்து வரும்போது சர்க்கரை சேர்த்து, கைவிடாமல் கலக்கவும். குங்குமப்பூவை சேர்த்து, சுருண்டு பொங்கல் பதம் வந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்து அதன் மேல் சிறிது நெய் விட்டு கலந்து இறக்கி படைத்து ரவா சர்க்கரைப் பொங்கலை சுடச்சுட பரிமாறவும்.

குறிப்பு: சர்க்கரைக்குப் பதிலாக வெல்லத்திலும், கற்கண்டிலும் செய்யலாம். சுவை தூக்கலாக இருக்க சிறிது மில்க்மெய்டையும் சேர்க்கலாம்.sl4101

Related posts

ஸ்டஃப்டு வெஜிடபிள் இட்லி

nathan

சில்லி -  கார்லிக் ஆனியன் லோட்டஸ்

nathan

போளி

nathan

வெண்டைக்காய் சிப்ஸ்

nathan

பனீர் குடைமிளகாய் பராத்தா

nathan

முட்டைக்கோஸ் வடை

nathan

தீபாவளி ஸ்பெஷல்: ஆப்பிள் பேரீச்சம்பழ கீர்!

nathan

மஷ்ரூம் கட்லட்

nathan

ராகி டோக்ளா

nathan