சுருள் முடி இருப்பவர்களுக்கு மற்றவர்களை காட்டிலும் அதிக சிரமமுண்டு. அடிக்கடி சிக்கல் விழுந்துவிடும். வேகமாக வறண்டு விடும். நுனிபிளவு அதிகமாக ஏற்படும். அடர்த்தியாக காணப்பட்டாலும், தலைமுடிக்கு இந்த ஹேர் ஸ்டைலும் ஒத்து வராது . உங்களுக்கான செய்ய வேண்டியவை செய்யக் கூடாதவை என்ன என்று பார்க்கலாம்.
செய்ய வேண்டியவை : ஷாம்பு : சுருள் முடி இருப்பவர்கள் செய்யும் தவறு எந்தவிதமான ஷாம்புவும் உபயோகப்படுத்துவதுதான். நீங்கள் வறண்ட கூந்தலுக்கான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். இதனால் கூந்தல் வறட்சியை தடுக்க முடியும்.
எத்தனை நாளுக்கொரு தலைக் குளியல் செய்யலாம் ? சுருள் முடி இருப்பவர்கள் தினமும் தலைக்கு குளிக்கக் கூடாது. இதனால் கூந்தல் சீக்கிரம் வெடித்துவிடும். வாரம் மூன்று அல்லது இருமுறை போதும்.
சிகை அலங்காரம் : சிலருக்கு சுருள் முடி அடர்த்தியாக இருக்கும். இதனால் பிடிக்கு அடங்காமல், பம்மென்று இருக்கும். ஏதாவது பார்ட்டிக்கு, அல்லது விழாவிற்கு போக வேண்டுமென்றால், எந்த அலங்காரம் செய்வதற்கு ஒத்துவராது.
இந்த சமயங்களில் தலைக்கு அலங்காரம் செய்வதற்கு முன், சிலிக்கான் சீரம் தலையில் கூந்தலில் தடவினால், கூந்தல் அடங்கும். நீளமாக தெரியும். இதனால் உங்கள் விருப்பப்படி சிகை அலங்காரங்கள் செய்யலாம். ஆனால் சிலிக்கான் சீரத்தை ஸ்கால்ப்பில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
செய்யக் கூடாதவைகள் : கடல் உப்பு : கடல் உப்பு ஸ்ப்ரே செய்தால் கூந்தலுக்கு நல்லது என்று நிறைய பரிந்துரைகளை பார்த்திருப்பீர்கள். கடல் உப்பு எந்த விதமான சருமத்திற்கும் நல்லதல்ல, அவை மேலும் வறட்சியை கொடுத்து, கூந்தல் வளர்ச்சியை பாதிக்கச் செய்யும். ஆகவே கடல் உப்பை கூந்தலுக்கு பயன்படுத்தாதீர்கள்.
குளிர்ந்த நீர் : குளிர்ந்த நீரில்தான் தலையை அலச வேண்டும். சுடு நீரில் அலசக் கூடாது என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது தவறு. கூந்தலுக்கு உயிர் கிடையாது. அதற்கு குளிர்ந்த நீர் மற்றும் சுடு நீர் இரண்டும் ஒன்றுதான். பெரிய மாற்றங்கள் வராது.
கூந்தலை அழுத்தி வாருதல் : உங்களுக்கு கூந்தல் பற்றிய அறிவுரைகளில் இதுவும் ஒன்று. இரண்டு நிமிடங்களுக்கு அழுத்தி சீவினால், ஸ்கால்ப்பில் இருக்கும் எண்ணெய் நுனி வரை சீராக பரவும் என்பது. இது முற்றிலும் பொய். ஸ்கால்ப்பில் சுரக்கும் எண்ணெய் நுனி வரை எல்லாம் பயணம் செய்யாது. ஆனால் ஸ்கால்ப்பில் வேர்கால்களை தூண்ட செய்யும்.
எந்த வித ஊட்டமென்றாலும் கூந்தலின் வேர்க்கால்களுக்கு தந்தால் போதும், தலை முடிகளுக்கு தரவேண்டியது இல்லை.