நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்கிற ஆசை யாருக்குத்தான் இருக்காது. அதிக ஆயுளுடன் இருக்க வேண்டுமென்றால் பலவித விஷியங்களை கடைபிடிக்க வேண்டும். இது பலருக்கும் பிடிக்காத ஒன்றுதான். என்றாலும் சில சுலபமான குறிப்புகள் உள்ளது. இவற்றை செய்து வந்தால் 30 வயத்திலும் சிக்கென்று இருக்கலாம்.
ஒரு சில இயற்கை முறை வைத்தியங்கள் தான் நமது ஆரோக்கியத்தை அதிகமாக்க பயன்படுகிறது. அந்த வகையில் 30 வயதை நெருக்கும் ஒவ்வொரு வரும் இந்த பழக்க வழக்கத்தை அன்றாடம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வாங்க, இவற்றை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்.
உடலும் முகமும்..!
உடல் ஆரோக்கியம் எப்படி முக்கியமோ, அதே போன்று தான் இந்த முகத்தின் ஆரோக்கியமும் மிக முக்கியமானதாகும். நாம் உடலுக்கு எடுத்து கொள்ளும் உணவை பொருத்தும், செய்ய கூடிய அன்றாட செயலை பொருத்தும் தான் இது வேறுபடும். இதற்கு சில இயற்கை குறிப்புகளே போதுமானது.
ரொம்ப பிசியா..?
உங்களது அலுவலக வேலைகள் அதிகம் இருந்தாலும் அதை முடிந்த அளவுக்கு வெகு சீக்கிரமாக செய்து முடித்து விடுங்கள். எப்போதும் பிசியாக இருப்பது போன்று வைத்து கொள்ளாதீர்கள். இது உங்களின் உடல் அமைப்பை பாதித்து சீரற்ற செயல்திறனை தரும்.
தவிர்த்தே ஆகணும்..!
30 வயதை நீங்கள் நெருங்கும் முன்னரே ஒரு சில உணவுகளை தவிர்த்து ஆக வேண்டும். ஏனெனில், அவை உங்களின் உடலில் அதிக அழுக்குகளை சேர்ப்பதோடு, முகத்தின் அழகையும் கெடுத்து விட கூடும். குறிப்பாக எண்ணெய் சேர்த்த உணவுகளை 30 வயதை நெருங்கும் போதே தவிர்த்து விடுங்கள் நண்பர்களே.
வயதாவை தடுக்க…
பலருக்கு வயதாவது கூட தெரிவதில்லை. இது போன்ற நிலை உங்களுக்கு ஏற்பட்டால் அதை இந்த டிப்ஸை வைத்து எளிதில் தீர்வு பெற்று விடலாம். தேவையானவை… வெள்ளை கரு 1 எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் யோகர்ட் 1 ஸ்பூன்
செய்முறை ;-
முதலில் முட்டையின் வெள்ளை கருவை தனியாக எடுத்து கொண்டு, நன்றாக அடித்து கொள்ளவும். பின் அதனுடன் யோகர்ட் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொண்டு முகத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம். இந்த குறிப்பை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் சருமம் வயதாவதை தடுக்கும்.
சர்க்கரை கம்மி பண்ணுங்க..!
30 வயதை நெருங்கும் போதே சர்க்கரையை குறைத்து கொண்டால் பலவித நன்மைகள் கிடைக்கும். இவை உஙக்ளின் சருமத்தையும் உடலையும் பாதிக்காது. மேலும், நீண்ட நாட்கள் இளமையாக வைத்து கொள்ள இது உதவும்.
எந்த குளியல் சரி..?
பொதுவாகவே சூடு நீரில் குளிப்பதால் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய் சுரப்பிகள் பாதிக்கப்படுகிறது. இதே நிலைதான் 30 வயதை கிடைக்கும் உங்களுக்கும். எனவே, வெது வெதுப்பான நீரில் குளிப்பது சிறந்தது.
சுருக்கங்களை போக்க
முகத்தில் ஏற்பட கூடிய சுருக்கங்கள் தான் நாம் வயதானதை குறிக்கிறது. சுருக்கங்களை குறைக்க மிக சிறந்த குறிப்பு இதுதான்.
தேவையானவை…
கேரட் பாதி உருளைக்கிழங்கு 1
மஞ்சள் தூள் 1 சிட்டிகை
பேக்கிங் சோடா 1 சிட்டிகை
செய்முறை :-
முதலில் கேரட் மற்றும் உருளை கிழங்கை வேக வைத்து கொள்ளவும். பிறகு இவற்றை மசித்து கொண்டு, மஞ்சள், பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவலாம். இந்த குறிப்பு சுருக்கங்களை விரைவிலே போக்கி விடும்.