28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
201611211430467028 peanut kulambu SECVPF
சைவம்

வேர்க்கடலை குழம்பு

சுவையான சத்தான வேர்க்கடலை குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

வேர்க்கடலை குழம்பு
தேவையான பொருள்கள்:

வேர்க்கடலை – அரை கப்
தேங்காய் துண்டுகள் – 2
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – ஒரு ‌டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – ஒரு ‌டீஸ்பூன்,
சீரகத்தூள் – ஒரு ‌டீஸ்பூன்,
புளிக்கரைசல் – சிறிதளவு
நறுக்கிய வெங்காயம் – சிறிதளவு
மிளகாய்த்தூள் – 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிதளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

• ஒரு பாத்திரத்தில் வேர்க்கடலையை ஊற வைக்க வேண்டும். பின் அதனை நன்கு வேக வைக்க வேண்டும்.

• புளிக்கரைசலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். தேங்காய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

• தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விட வேண்டும். கொதித்ததும் வேக வைத்த வேர்க்கடலையை உள்ளே போட வேண்டும்.

• பின்பு நன்கு கொதித்ததும் மற்றும் ஒரு பாத்திரத்தில் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும்.

• எண்ணெய் நன்கு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகத்தூள், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்.

• பொன்னிறமாக மாறியதும் அதனை கொதிக்கும் குழம்பில் சேர்த்து இறக்கி வைக்க வேண்டும்.

இப்போது சூடான வேர்க்கடலைக் குழம்பு ரெடி.201611211430467028 peanut kulambu SECVPF

Related posts

சுண்டக்காய் வத்தக்குழம்பு

nathan

சுவையான திணை அரிசி வெஜிடபிள் சாதம்

nathan

பஞ்சாப் உருளைக்கிழங்கு

nathan

சுவை மிகுந்த கொண்டைக்கடலை புலாவ்

nathan

உருளைக்கிழங்கு சாம்பார்

nathan

சுலபமான சுவையான சாம்பார் செய்ய எளிமையான சமையல் குறிப்புகள்!

nathan

மாங்காய் வற்றல் குழம்பு

nathan

வெஜிடேரியன் முட்டை சப்பாத்தி

nathan

காலிப்ளவர் பட்டாணி பனீர் மசாலா

nathan