23.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
201611151017254853 Women of the key moments in the life of man SECVPF
மருத்துவ குறிப்பு

ஆணின் வாழ்க்கையில் பெண்களின் முக்கிய தருணங்கள்

தாய், தங்கை, தோழி, காதலி, மனைவி, மகள் போன்ற பாத்திரங்கள் தான் ஆணின் வாழ்கையை முழுமைப்படுத்துகிறது.

ஆணின் வாழ்க்கையில் பெண்களின் முக்கிய தருணங்கள்
ஆண் இன்றி பெண்ணும், பெண் இன்றி ஆணும் உறவு அமையாது. ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும் பெண் என்பவள் பல பாத்திரங்கள் கொண்டு பயணிக்கிறாள். அதில், தாய், தங்கை, தோழி, காதலி, மனைவி, மகள் போன்ற பாத்திரங்கள் தான் ஆணின் வாழ்கையை முழுமைப்படுத்துகிறது. இவர்கள் ஓர் ஆணின் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமாக இருக்கிறார்கள், இவர்களது பங்கு ஆணின் வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பார்க்கலாம்..

* தாயாக ஓர் ஆணின் வாழ்கையில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறாள். இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்துவது மட்டுமின்றி, இவள் மூலமாக தான் உறவுகளும் நமக்கு அறிமுகம் ஆகிறது.

* ஓர் ஆண் முதன் முதலாக காவலனாக இருப்பது அவனது சகோதரிக்கு தான். ஒவ்வொரு மகளின் முதல் ஹீரோ அப்பா என்றால், முதல் காவலன் அவளது சகோதரனாக தான் இருக்க முடியும்.

* உறவினர், தாய், சகோதரிக்கு பிறகு ஓர் ஆணுக்கு கிடைக்கும் முதல் வெளியுலக பெண் உறவு, தோழி தான். ஓர் உண்மையான தோழியுடன் ஆண் தன் வாழ்க்கையின் அனைத்து சுக, துக்கங்களையும் பகிர்ந்துக் கொள்கிறான். ஏனெனில், அந்த ஒரு தோழியினால் தான் அவனது துக்கத்தை குறைக்கவும், சுகத்தை பெருக்கவும் முடியும்.

* சிலருக்கு காதலி மனைவியாக அமைகிறார்கள், சிலருக்கு மனைவி தான் காதலியாக அமைகிறார்கள். ஏதோ ஓர் வகையில் அனைவருக்கும் ஓர் காதலில் கிடைத்து விடுகிறாள். ஒவ்வொரு ஆண்மகனின் பருவ வயது ஏக்கம் காதல். ஆனால் அது பதின் வயதை தாண்டியும் நிலைத்து நின்றால் மட்டுமே புனிதம் ஆகிறது. காதல் என்பது ஓர் ஆணின் வாழ்க்கையை சொர்க்கமாக்குகிறது.

* தன் பதியை நம்பி உடல், பொருள், ஆவியில் பாதி அங்கம் கொடுப்பவள் மனைவி. மனைவி தவறு செய்யும் கணவன் கண்டிப்பான், அதே கணவன் தவறு செய்யும் போது மனைவி திருத்துவாள். இதுதான் கணவன், மனைவிக்கு இடையில் இருக்கும் வித்தியாசம். உண்மையிலேயே மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் தான்.

* ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும், பெண்ணுடனான உறவு என்பது, ஓர் பெண்ணின் கருவறையில் தொடங்கி, மற்றொரு பெண்ணின் கருவறையில் முடிவடைகிறது. தாயின் கருவறையில் இருந்து இவ்வுலகில் தொடங்கி, மனைவியின் கருவில் இருந்து உதித்த மகள் எனும் புதிய உலகம் என ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும் இரண்டு உலகங்கள் இருக்கின்றன.

* முதுமை எட்டிய பிறகு ஓர் ஆண் அதிகம் மனம் மகிழ்ந்து புன்னகைக்கிறான் எனில் அதற்கு முக்கிய காரணம் அவனது உயிரில் இருந்து ஜனித்த உயிரின் உயிராக தான் இருக்க முடியும். தாத்தா ஆரம்பித்து பேத்தி கேட்கும் விடைகளுக்கு ஏதேனும் ஓர் பதிலை அவன் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறான்.201611151017254853 Women of the key moments in the life of man SECVPF

Related posts

சர்க்கரை நோயால் ஆண்மை குறைபாடு ஏற்படுமா?

nathan

பிரசவத்திற்கு பிறகு பெண்களிடம் ஏற்படும் முக்கிய மாற்றங்கள்! தெரிந்துகொள்வோமா?

nathan

கோபம் குறைக்க உதவும் 14 வழிமுறைகள்!

nathan

அபார்ஷனிலேயே இத்தனை வகைகள் உள்ளதா?உஷாரா இருங்க…!

nathan

சளித் தொல்லை, ஜீரணசக்திக்கு மூலிகைப்பொடி

nathan

இதில் ஒரு அறிகுறி இருந்தாலும் உங்கள் கிட்னி பெரிய ஆபத்தில் இருக்குனு அர்த்தமாம்…

nathan

உங்களுக்கு தெரியுமா சொரியாசிஸ் நோய் வரக் காரணங்களும் அறிகுறிகளும்….!

nathan

ஹார்மோன் கோளாறால் ஏற்படும் சரும பிரச்சனைகளை சரிசெய்ய என்ன பண்ணனும் தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளுக்கு இதய நோய்கள் வருவது எதனால்?

nathan