26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
201611141256120551 how to make brinjal rice SECVPF
சைவம்

கத்தரிக்காய் ரைஸ் செய்வது எப்படி

வெரைட்டி ரைஸ்களில் கத்தரிக்காய் ரைஸ் சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

கத்தரிக்காய் ரைஸ் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

சாதம் – 1 கப்,
பிஞ்சுக் கத்தரிக்காய் – 6,
வெங்காயம்- ஒன்று,
கடுகு – கால் டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – ஒன்று,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
இஞ்சி-பூண்டு விழுது – அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

* அதன் பிறகு இதில் இஞ்சி – பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிய பின்னர் நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து, வதக்கவும்.

* கத்தரிக்காய் பாதியளவு வெந்ததும் கரம்மசாலாத்தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டுக் கலந்து வதக்கவும்.

* கத்தரிக்காய் வெந்து மணம் வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* இந்தக் கலவையில் சூடான சாதம், நெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து பரிமாறலாம்.201611141256120551 how to make brinjal rice SECVPF

Related posts

சிம்பிளான… டிபன் சாம்பார்

nathan

கறிவேப்பிலை சாதம்

nathan

உருளைக்கிழங்கு சாதம்

nathan

சூப்பரான உருளைக்கிழங்கு – பிரட் பிரியாணி

nathan

30 வகை பிரியாணி

nathan

சிக்கன் காலிஃப்ளவர் மசாலாக்கறி!

nathan

பன்னீர் மாகன் வாலா

nathan

கோவைக்காய் துவையல்

nathan

மஷ்ரூம் பிரியாணி

nathan