முகத்தில் முதலில் சுருக்கங்கள் ஆரம்பிக்கும் பகுதி கண்களின் ஓரங்களில்தான். அதன் பின் உதட்டு ஓரங்களிலும் ஏற்பட்டு, மெல்ல மெல்ல நுண்ணிய சுருக்கங்கள் முகத்தில் தோன்ற ஆரம்பிக்கும்.
கண்களில் சுருக்கங்கள் வரத் தொடங்கும்போதே நீங்கள் உஷாராகிவிட வேண்டும். அப்போதிருந்தே பராமரித்தால், சுருக்கங்களை தடுத்து என்றும் இளமையாக நீங்கள் வலம் வரலாம்.
மேக்கப், க்ரீம்கள் ஆகையவைகள் சுருக்கங்கள் விரைவில் தோன்ற காரணங்களாக இருக்கும். போதிய அளவு நீர் பற்றாக்குறையாலும் சுருக்கங்கள் அதிகரித்துவிடும். மன அழுத்தமும் ஒருவகையில் காரணம்தான்.
15 நாட்களுக்கு ஒருமுறை வீட்டிலேயே ஃபேஸியல் செய்து கொள்ள வேண்டும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். சருமமும் புத்துயிர் பெற்று சுருக்கங்களின்றி இருக்கும்.
உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஒரு எளிமையான ஃபேஸ்பேக் சொல்லட்டுமா? ரெட் ஒயின் பேக்.
ரெட் ஒயின் குடிப்பதால் உடலுக்கு நல்லது என தெரிந்திருப்பீர்கள். அதேபோன்று அது சருமத்திலும் ஏற்படும் சுருக்கங்களை நீக்கிவிடும். முதுமையான தோற்றம் உங்களுக்கு இருந்தால், அதை நினைத்து வருந்த வேண்டாம்.
ஏனெனில் வந்த பின்னும், போக்கக் கூடியது ரெட் ஒயின். இறந்த செல்களை அகற்றி, மென்மையான, இளமையான சருமத்தை மீட்டு தரும்.
எப்படி செய்வது என பார்க்கலாம். தேவையானவை :
ரெட் ஒயின் – அரை கப் தேன் – 2-3 டேபிள் ஸ்பூன்
ரெட் ஒயினில் தேனை கலந்து, முகத்தில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவவும். வாரம் ஒருமுறை இப்படி செய்தால், உங்கள் சருமத்தின் இளமை நீடித்து இருக்கும்.