28 C
Chennai
Wednesday, Nov 13, 2024
1455946048 1784
சிற்றுண்டி வகைகள்

மாலைநேர டிபனுக்கு ஏற்ற மைசூர் போண்டா

தேவையானவை:

உளுத்தம்பருப்பு – 1 கப்
பச்சரிசி – 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி – 1 துண்டு
பச்சை மிளகாய் – 2
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
தேங்காய் – 2 டேபிள்ஸ்பூன் (பல்லு பல்லாக நறுக்கியது)
ஆப்பசோடா – 1 சிட்டிகை
முந்திரி – 8 நறுக்கியது
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

உளுத்தம்பருப்பையும், அரிசியையும் ஒன்றாக ஊற வையுங்கள்.

ஒரு மணிநேரம் ஊறியதும் நன்கு மெத்தென்று அரைத்தெடுங்கள். அவ்வப்பொழுது சிறிது தண்ணீர் தெளித்து, அரையுங்கள்.

இஞ்சி, மிளகாய், பெருங்காயம் மிக்ஸியில் அரைத்து மாவில் சேருங்கள். அத்துடன் பொடியாக நறுக்கிய முந்திரிப்பருப்பு, தேங்காய், மிளகு, சீரகம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.

எண்ணெயைக் காயவைத்து சிறு சிறு போண்டாக்களாக உருட்டி போட்டு நன்கு வேக வைத்து எடுங்கள். மிகவும் பாப்புலரான இந்த மைசூர் போண்டா, மாலைச் சிற்றுண்டிக்கும் விருந்துகளுக்கும் ஏற்றது.1455946048 1784

Related posts

கருப்பட்டி புட்டிங்

nathan

பனீர் பாஸ்தா

nathan

சுவையான கடலை மாவு போண்டா

nathan

ரவை கொழுக்கட்டை

nathan

டபுள் டெக்கர் பரோட்டா

nathan

ஃபுரூட் கேக்

nathan

சுவையான சத்தான வாழைப் பூ துவையல்

nathan

மெக்ஸிகன் டா கோஸ் (Mexican Taccos)

nathan

சுவையான பருப்பு நீர் கொழுக்கட்டை

nathan