28.8 C
Chennai
Monday, Jul 14, 2025
sl4041
சிற்றுண்டி வகைகள்

பிரெட் மசாலா

என்னென்ன தேவை?

பிரெட் மாவு தயாரிக்க…

மைதா-300 கிராம்,
ட்ரை ஈஸ்ட் பவுடர் – 1 டீஸ்பூன்,
பால் பவுடர்-50 கிராம்,
உப்பு – சிறிதளவு,
பொடிக்காத சர்க்கரை – சிறிதளவு,
வெண்ணெய் – 50 கிராம்.

எப்படிச் செய்வது?

பிரெட் மாவு செய்ய கொடுத்துள்ள பொருட்களைக் கொண்டு முதலில் பிரெட் மாவு ரெடி செய்து கொள்ளவும். சிறிது நேரம் கழித்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். சுமார் 2, 3 மணி நேரம் கழித்து அது இரு மடங்கு ஆனபின் சூடான எண்ணெயில் பொரிக்கவும்.

கிரேவி செய்ய…

வெங்காயம், தக்காளி,
குடைமிளகாய் தலா – 1/4 கப் (நீளமாக நறுக்கியது),
கொத்தமல்லி – 1/2 கப்,
சோயா சாஸ், தக்காளி சாஸ்,
சில்லி சாஸ், மிளகாய்த்தூள் தலா – 2 டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,
உப்பு- தேவைக்கு.

எப்படிச் செய்வது?

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் மிளகாய் தூள், குடைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கியபின் உப்பு சேர்க்கவும். அதன்பின் சோயா, தக்காளி, சில்லி சாஸ், கொத்தமல்லி அனைத்தையும் சேர்த்து கொதிக்கவிட்டு கடைசியாக பிரெட் துண்டுகளை சேர்த்து இறக்கி விடவும். sl4041

Related posts

சிறுதானிய போண்டா தினை – சோளம்

nathan

கப் கேக் செய்வது எப்படி ?

nathan

சூப்பரான காளான் பஜ்ஜி

nathan

உளுந்து வடை

nathan

சூப்பரான மிளகாய் பஜ்ஜி

nathan

கேழ்வரகு உளுந்து தோசை

nathan

கோதுமை வெஜ் ஸ்டஃப் கொழுக்கட்டை

nathan

பச்சரிசி பால் பொங்கல்

nathan

சவ்சவ் கட்லெட்

nathan