24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
ஆரோக்கியம்உடல் பயிற்சி

முதுமையில் உடற்பயிற்சி

elderly_exerciseவயதானாலும் வசந்தம்தான்

‘இந்த வயசுல என்ன எக்சர்சைஸ் வேண்டி கிடக்கு..? அப்படியே பண்ணாலும் என்ன பிரயோசனம் இருக்கு?’ என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். உண்மையில் வயதுக்கும் உடற்பயிற்சிக்கும் சம்பந்தமே இல்லை. எந்த வயதிலும் உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.
நான்கு விதமான உடற்பயிற்சிகளை முதியவர்கள் செய்யலாம். தனிப்பட்ட அல்லது ஒரு சில தசைகளை மட்டும் சுருங்கி விரியச் செய்கின்ற உடற்பயிற்சிகளை எளிதில் உடலுறுப்புகளை அசைத்தே செய்ய முடியும். இந்த பயிற்சிகளை செய்வதற்கு ஆக்ஸிஜன் (பிராணவாயு) அதிகமாக தேவைப்படாது.

நான்கு வகை பயிற்சிகள்
1.தசைகளை சுருக்கி இயக்கும் பயிற்சி
2.செயல் சார்ந்த உடற்பயிற்சி
3.ஆக்ஸிஜனை உட்கொண்டு செய்யும் உடற்பயிற்சி
4.தசைப்பயிற்சி
தசைகளை சுருக்கி இயக்குதல்
தசைகளை சுருங்கச் செய்து, பிறகு இயங்கச் செய்வது இந்த வகையான உடற்பயிற்சி. இது பளு தூக்கல், உடலை வளைத்தல், தாண்டல் என பல வகைப்படும். ‘கட்டழகுப் பயிற்சி’களான இவை தசைகளுக்கு அதிகமான பயிற்சியை அளிக்கும்.
செயல் சார்ந்த உடற்பயிற்சி
இப்பயிற்சியை ஒன்று அல்லது இரண்டு வழிகளில் செய்யலாம். இதை செய்யும்போது குறிப்பிட்ட அளவு ஆக்ஸிஜன் தேவைப்படும். பயிற்சியின் இறுதியில் அதன் அளவு குறைபடும். மாடிப் படிக்கட்டுகளில் ஏறி இறங்குதல், குறிப்பிட்ட தூரத்தை குறித்த நேரத்தில் கடப்பது போன்றவை இப்பயிற்சியில் அடங்கும்.
ஆக்ஸிஜனை உட்கொள்ளும் பயிற்சி
இந்த உடற்பயிற்சி மிகவும் சிறந்தது. ஏனெனில் இந்த பயிற்சியை செய்வதற்கு ஆக்ஸிஜனை உட்கொள்வது அவசியத் தேவையாகின்றது. பயிற்சி செய்யும்போது உண்டாகும் களைப்பினால் ஆக்ஸிஜன் குறைவதில்லை.
இந்த பயிற்சியை செய்வதால் நுரையீரல்கள் மிகுதியான ஆக்ஸிஜனை உட்கொண்டு நச்சு வாயுவான கார்பன் டை ஆக்சைடை (கரியமில வாயு) மிகுதியாகவும், சிரமமின்றியும் வெளியேற்றுகின்றது. இதனால் இதயம் வலிமை பெறுகின்றது.
தசைப்பயிற்சி
இந்த பயிற்சியில் தசைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அழுந்துமாறு செய்வது அல்லது அசைவில்லாத ஒரு பொருள் மீது நம் வலிமையை காட்டி சோதிப்பது. இந்தப் பயிற்சியினால் தசைகள் உருண்டு திரண்டு பருத்துக் காணப்படும். இது வெறும் தசைப் பயிற்சியே.
இந்த நான்கு வகை உடற்பயிற்சிகளும் முதியோர் செய்யத்தக்கவை. இவற்றுள் அவரவர்கள் விருப்பமான பயிற்சியை மேற்கொண்டு வந்தால், வயதான காலமும் வசந்த காலமாகவே இருக்கும்.

Related posts

பன்றிகாய்ச்சலிருந்து பாதுகாப்பபை பெற கைமருந்து!…

sangika

எடையை குறைக்க யாருக்கு என்ன பயிற்சி?

nathan

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்

nathan

பெண்கள் எப்பொழுது வேண்டுமானலும் உடற்பயிற்சி செய்யலாமா

nathan

வெறும் வயிற்றில் பச்சை முட்டை சாப்பிடலாமா?

nathan

அடிவயிற்றில் வலிமை தரும் பயிற்சி

nathan

உடலை ஃபிட்டாக வைக்கும் பயிற்சிகள்

nathan

உடலின் கலோரிகளை விரைவில் குறைக்கும் உடற்பயிற்சிகள்

nathan

வாயு தொந்தரவை தீர்க்கும் ஜானு சிரசாசனம்

nathan