25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
12 1468307863 7 brown sugar olive oil aloe vera
தலைமுடி சிகிச்சை

இரண்டே வாரத்தில் பிட்டத்தில் இருக்கும் பருக்கள் மற்றும் கருமையைப் போக்கும் சில வழிகள்!

பலருக்கு வெளியே சொல்ல முடியாத அளவில் பிரச்சனைகள் இருக்கும். அப்படி வெளிப்படையாக சொல்ல முடியாத ஓர் பிரச்சனை தான் பிட்டம் கருமையாக இருப்பது மற்றும் பிட்டத்தில் பருக்கள் இருப்பது. பிட்டமும் உடலில் இருக்கும் மற்ற பகுதிகளைப் போல் தான் என்பதை மறவாதீர்கள்.

சிலருக்கு பிட்டம் சொரசொரவென்று பருக்களாக இருக்கும். இன்னும் சிலருக்கு கருமையாக இருக்கும். இதைப் போக்கவே வழியில்லையா என்று பலரும் ஏங்குவதுண்டு. அத்தகையவர்களுக்கு இக்கட்டுரை உபயோகமாக இருக்கும்.

ஏனெனில் இங்கு பிட்டத்தில் இருக்கும் கருமை மற்றும் பருக்களைப் போக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால், நிச்சயம் அழகான பிட்டத்தைப் பெறலாம்.

வழி #1 எலுமிச்சை சாறு எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மை, சருமத்தில் இருக்கும் கருமையைப் போக்க வல்லது. அதற்கு எலுமிச்சை சாற்றினை பஞ்சில் நனைத்து, பிட்டத்தைச் சுற்றி தடவி 2-3 நிமிடம் மசாஜ் செய்து, பின் 10-15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். முக்கியமாக இந்த செயலுக்குப் பின், மறவாமல் மாய்ஸ்சுரைசரைத் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பிட்டத்தில் இருக்கும் கருமை மற்றும் பருக்கள் நீங்கிவிடும்.

வழி #2 கொக்கோ வெண்ணெய்
கொக்கோ வெண்ணெய் கூட சரும கருமையைப் போக்கும் சக்தி கொண்டது. அதற்கு கொக்கோ வெண்ணெயைக் கொண்டு பிட்டத்தை 10 நிமிடம் மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் அழகான மென்மையான பிட்டத்தைப் பெறலாம்.

வழி #3 மஞ்சள், சந்தனம் மற்றும் தேன் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளுடன், 1 டேபிள் ஸ்பூன் சந்தனப் பொடி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, பிட்டத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், 2 வாரத்தில் பிட்டத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

வழி #4 ஓட்ஸ், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு ஓட்ஸ் பொடியுடன் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பிட்டத்தில் தடவி 15-30 நிமிடம் ஊற வைக்கவும். பேஸ்ட்டானது நன்கு உலர்ந்ததும், வெதுவெதுப்பான நீரால் கழுவவும். இந்த முறையை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், 1 மாதத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

வழி #5 ஆரஞ்சு தோல், எலுமிச்சை தோல் மற்றும் தயிர் 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை தோல் பொடியை சேர்த்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, பிட்டத்தில் தடவி 2-3 நிமிடம் மசாஜ் செய்து, பின் 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இச்செயலாலும் நல்ல பலன் கிடைக்கும்.

வழி #6 சர்க்கரை, அவகேடோ எண்ணெய் மற்றும் கற்றாழை 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரையுடன், 1 டேபிள் ஸ்பூன் அவகேடோ எண்ணெய் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, பிட்டத்தில் தடவி 2-3 நிமிடம் மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

வழி #7 நாட்டுச் சர்க்கரை, ஆலிவ் ஆயில் மற்றும் சர்க்கரை 2 டேபிள் ஸ்பூன் நாட்டுச் சர்க்கரையுடன், 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து பேஸ்ட் செய்து, பிட்டத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இந்த முறையை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், ஒரே மாதத்தில் நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள்.

12 1468307863 7 brown sugar olive oil aloe vera

Related posts

சுருட்டை முடியை பராமரிக்க சில சூப்பர் டிப்ஸ்….!

nathan

இந்த எண்ணெயை தினமும் யூஸ் பண்ணுங்க.. தலைமுடி எலி வால் போன்றாவதைத் தடுக்கணுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பிரசவத்திற்கு அப்புறம் உங்களுக்கு அதிகமாக முடி கொட்டுவதை எப்படி தடுக்கலாம் தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பளபளப்பான பட்டுப் போன்ற உறுதியான கூந்தலுக்கு 10 எளிய வழிகள்!!!

nathan

வழுக்கைத் தலையாவதை தடுக்கும் பாட்டி வைத்தியம்

nathan

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் வெங்காயச்சாறு

nathan

இளநரைக்கு இயற்கை எண்ணெய்

nathan

உங்க முடி நீளமா அடர்த்தியா பளபளன்னு கருகருன்னு வளர…

nathan

முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்

nathan