25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
201612261401124645 wife doing romantic things to do for husband SECVPF
மருத்துவ குறிப்பு

ஆண்கள் மனைவியை ஏமாற்றி சின்னவீடு வைத்து கொள்ள காரணம்

ஆண்கள் மனைவியை ஏமாற்றி சின்னவீடு வைத்து கொள்வதற்கான காரணத்தை பார்க்கலாம்.

ஆண்கள் மனைவியை ஏமாற்றி சின்னவீடு வைத்து கொள்ள காரணம்
பூனையில் சைவம் கிடையாது, ஆண்களில் ராமன் கிடையாது என்று நம் ஊர் கவிஞர் ஒருவர் எழுதியிருந்தார். உலகம் முழுவதும் 2.7 மில்லியன் ஆண்கள் தங்களின் மனைவியை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். பணம், பொருள் மட்டுமல்ல பாலியல் உணர்வுகளும் தூண்டிவிடப்பட்டு ஆண்களையும், பெண்களையும் ஆட்டிப்படைக்கிறது. இதனால் மரபு மீறிய செயல்களும், இலக்கணப்பிழைகளும் ஆங்காங்கே நேர்கிறது.

என்னதான் தேவதை மாதிரி மனைவி இருந்தாலும், பிசாசு மாதிரி ஒரு எக்ஸ்ட்ரா பிட்டிங் வேண்டும் என்பது ஆண்களின் ஆசையாக இருக்கிறது. எவ்வளவு அழகான மனைவி இருந்தாலும் அல்லது காதலி இருந்தாலும், ஆண்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் வேறு பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ளத் தயங்க மாட்டார்களாம்.

ஆண்களைப் பொறுத்தவரை போதும் என்ற மனமே இல்லை. ஆண்களின் ஆசையும், செக்ஸ் ஆசையும் முற்றுப்புள்ளி இல்லாத தொடர் கதையாகவே உள்ளது. எவ்வளவு செக்ஸ் கிடைத்தாலும் அதை அனுபவிக்கவே அவர்கள் முயலுகிறார்கள். போதும் என்று நிறுத்திக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. வேடிக்கைக்காகவும், ஆசைக்காகவும்தான் இந்த கள்ள உறவுகளை அவர்கள் நாடுகிறார்கள்.

செக்ஸ் விஷயத்தில் என்னதான் அழகான மனைவி இருந்தாலும் அல்லது காதலி இருந்தாலும், வாய்ப்பு கிடைத்தால், பின்விளைவுகள் இருக்காது என்று உறுதியாகத் தெரிந்தால் இன்னொரு பெண்ணுடன் உறவு வைக்க அவர்கள் தயங்க மாட்டார்கள். ஆண்களைப் பொறுத்தவரை செக்ஸ் உணர்வு என்பது புற நிகழ்வுகளாகவே உள்ளதாக செக்ஸாலஜிஸ்டுகள் கூறுகிறார்கள். உணர்வுப்பூர்வமான செக்ஸ் உணர்வு அவர்களுக்கு வருவதில்லை. வெளி நிகழ்வுகளின் தூண்டுதலால் செக்ஸ் உணர்வை அவர்கள் அடைகிறார்கள். அந்த உணர்வை உடனடியாக வெளிப்படுத்தி விடவும் துடிக்கிறார்கள்.

இந்த போலியான உணர்வுகளுக்கு அவர்கள் காதல் என்றும் பெயர் வைக்கத் தயங்குவதில்லை. எனக்கு வாய்ப்பு கிடைத்தது, அந்தப் பெண்ணே சம்மதித்தாள், அதனால்தான் உறவு வைத்துக் கொண்டேன் என்று கூறும் ஆண்களே அதிகம். அதாவது பழியை பெண்கள் பக்கம் நைசாக திருப்பி விட்டு விடுகிறார்கள்.

இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். குறிப்பாக மனைவிகள். தங்களது கணவர்கள் நல்லவர்கள், ஒழுக்கமானவர்கள், பிறன் மனை நோக்காதவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் ஆண்களின் புத்தியை பெண்கள் அத்தனை சீக்கிரம் புரிந்து கொள்வதில்லை.

ஆண்களுக்கும், பெண்களுக்கும் செக்ஸ் விஷயத்தில் நிறைய வேற்றுமை இருக்கிறது. பெண்களின் நம்பிக்கையை குழி தோண்டிப் புதைப்பதைத்தான் ஆண்கள் முதலில் செய்கிறார்கள். யாருடனும் நாம் உறவு கொள்ளலாம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்து விடுகிறார்கள். அதை உரிமையாகாவும் கருதிக் கொள்கிறார்கள்.

ஆனால் பெண்கள் நம்பிக்கை அடிப்படையிலும், நீண்ட கால உறவின் அடிப்படையிலும்தான் பிறரிடம் தங்களை உடல் ரீதியாக ஒப்படைக்க முன்வருவார்கள். இவனை நாம் நம்பலாம், இவனிடம் நம்மைக் கொடுத்தால் நலமாக இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் அவர்கள் ஒரு ஆணிடம் தங்களைக் கொடுக்க முன்வருகிறார்கள்.

எது எப்படி இருந்தாலும், செக்ஸ் என்பது உடல் வேட்கைக்காக மட்டுமல்ல, அதில் சற்று உண்மையான உணர்வும் இருக்க வேண்டும் என்பதை இரு பாலினரும், குறிப்பாக ஆண்கள் புரிந்து கொள்வதுதான் நல்லது. இதற்கான எல்லா ஆண்களுமே தப்பு செய்பவர்கள் என்று சொல்ல வரவில்லை. சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அமைந்தால் யார் வேண்டுமானாலும் தவறு செய்வார்கள்.

Related posts

ஜாக்கிரதை! நுரை நுரையாக சிறுநீர் கழிக்கிறீர்களா?

nathan

தைராய்டு பிரச்சனை- நோய் அறிகுறியும் சிகிச்சையும்!

nathan

தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! பெண்களே வெள்ளைபடுதல் குணமாக இதோ அருமையான பாட்டி வைத்தியம்..!

nathan

சர்க்கரை நோய் கட்டுக்குள் இல்லையா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

சளி குறைய – பாட்டி வைத்தியம்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கர்ப்பம் தங்காமல் போவதற்கு முக்கிய காரணங்கள்!

nathan

புதிய உறவுகளுக்காக பழைய உறவுகளை உதாசீனப்படுத்தாதீங்க

nathan

தெரிஞ்சிக்கங்க…சிசேரியனுக்கு பிறகு சுகப்பிரசவம் நிஜமாவே சாத்தியமா?

nathan