25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201611081117388637 banana stem Drumstick leaves poriyal SECVPF1
சைவம்

சத்து நிறைந்த முருங்கை கீரை – வாழைத்தண்டு பொரியல்

முருங்கை கீரை மட்டும் உபயோகித்து பொரியல் செய்வது வழக்கம். அதனுடன் வாழைத்தண்டை சேர்த்து பொரியல் செய்தால் அருமையாக இருக்கும்.

சத்து நிறைந்த முருங்கை கீரை – வாழைத்தண்டு பொரியல்
தேவையான பொருட்கள் :

முருங்கைக்கீரை – 1 கப்
வாழைத்தண்டு – சிறிய துண்டு
வெங்காயம் – 1
தேங்காய் துருவல் – 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
சிகப்பு மிளகாய் – 1
கடுகு, உளுத்தம் பருப்பு – தாளிக்க
எண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு – தேவைக்கு

செய்முறை :

* முருங்கைக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

* ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வாழைத்தண்டை நாரை எடுத்து விட்டு மெல்லி துண்டுகளாக நீளவாக்கில் வெட்டி மோரில் போட்டு வைக்கவும். இவ்வாறு மோர் கலந்த நீரில் வாழைத்தண்டு துண்டுகளை போட்டு வைப்பதால் நிறம் மாறாமல் இருக்கும்.

* வாணலியை அடுப்பின் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், ப.மிளகாய் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* இப்போது வாழைத்தண்டு சேர்த்து ஒரு முறை கிளறி விடவும்.

* வாழைத்தண்டு சற்று வெந்ததும் முருங்கைக்கீரை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி மூடி வேகும் வரை மூடி வைக்கவும்.

* இரண்டும் வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.

* சுவையும் சத்தும் நிறைந்த முருங்கைக்கீரை வாழைத்தண்டு பொரியல் தயார்.

* சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.201611081117388637 banana stem Drumstick leaves poriyal SECVPF

Related posts

முருங்கைக்கீரை பொரிச்சகுழம்பு செய்ய…!

nathan

சுவையான பச்சை பயறு மசாலா

nathan

உடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பு மோர்க்கூழ்

nathan

பேச்சுலர்களுக்கான… பச்சை பயறு குழம்பு

nathan

சமைக்கலாம் வாங்க! கடாய் பனீர்- Restaurant Style Karahi Paneer :

nathan

ஃபிளாக்ஸ் சீட்ஸ் பருப்பு பொடி

nathan

ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா

nathan

ஆலு பலாக் ரைஸ்

nathan

பன்னீர் ராஜ்மா மசாலா

nathan