28.9 C
Chennai
Tuesday, Jan 27, 2026
1e814e6c 864a 4b75 a8c1 7a3f4aa39488 S secvpf
மருத்துவ குறிப்பு

தீக்காயம் பட்டவருக்கு செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சை முறைகள்

அவசியம் அறிய வேண்டிய முதலுதவி முறைகள்..

* நீங்கள் அறிந்து எங்காவது தீப்பற்றிக்கொண்டால் உடனே தீயணைப்புத் துறைக்கு (போன் எண் 101) தகவல் தெரிவியுங்கள்.
* எண்ணெய் மற்றும் அமிலத்தால் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு மணலை உபயோகித்து நெருப்பை அணைக்க முயலுங்கள். மற்ற தீவிபத்துகளை நீரூற்றி அணைக்க முயற்சி செய்யுங்கள்.
* விபத்தின்போது தீப்பிடித்து எரியும் நபரின் அருகில் நீங்கள் இருந்தால் உடனே அவரை கீழே தள்ளி கம்பளம் – போர்வை, கோணி இதில் ஏதாவது ஒன்றினால் அவரை இறுகச் சுற்றினால் தீ பரவாமல் அணைந்து விடும்.
* ஆடையில் தீப்பற்றி விட்டால் பயந்து ஓடக்கூடாது. ஓடினால் காற்றின் வேகத்தில் தீ மேலும் வேகமாக பற்றி எரியும். அதனால் தீப்பற்றியவர் கீழே படுத்துக் கொள்ள வேண்டும்.
* சூடான பாத்திரங்களை தொடுவதனாலோ, கொதிக்கும் சூடான எண்ணெய் தெறித்து விழுவதினாலோ, சூடான பொருள் உடலின் மீது விழுவதனாலோ ஏற்படும் சிறு புண்கள், கொப்புளங்களை கையினால் தேய்ப்பதோ, நகத்தால் கிள்ளுவதோ கூடாது. அப்படி செய்தால் விஷக் கிருமிகள் உள்ளே சென்றுவிட வாய்ப்புகள் அதிகம். அந்தக் கொப்புளங்களின் மீது ‘ஆன்டிசெப்டிக்’ மருந்துகளை வைத்து லேசாக கட்டுப் போட வேண்டும்.
* தீக்காயங்களுக்கு தேன் மிகவும் பயன்தரும். தேனை காயத்தின் மீது தடவலாம். முட்டையின் வெள்ளைக் கருவை புண்ணின் மீது தடவினால் எரிச்சல் குறையும்.
* கடுமையான தீக்காயங்களுக்கு அதன் மீது காற்றுப்படாமல் மூட வேண்டும். இது வலியை குறைக்கும்.
* தீ விபத்தில் உடலின் மீது துணி ஒட்டிக் கொண்டிருந்தால் அவசரப்பட்டு அந்தத் துணியை அகற்றக் கூடாது.
* இரண்டு கரண்டி சமையல் சோடாவை நீரில் கொதிக்க வைத்து வெதுவெதுப்பானதும் சுத்தமான துணியை அந்த நீரில் நனைத்து தீப்புண்ணை மூடலாம். துணி காய்ந்துபோனால் மீண்டும் அந்த நீரை சொட்டு சொட்டாக விட்டு நனைக்கலாம்.
* தீக்காயம் பட்டவருக்கு அடிக்கடி உப்பு கலந்த நீர், எலுமிச்சை சாறு கலந்த நீர், வெந்நீர் இவற்றைக் கொடுக்கலாம்.
* தீக்காயங்கள் அதிகம் ஏற்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.1e814e6c 864a 4b75 a8c1 7a3f4aa39488 S secvpf

Related posts

11 பாசிட்டிவ் பழக்கங்கள்..!

nathan

உங்களுக்குதான் இந்த விஷயம்! கருவுறுதலுக்கு முன் பெண்கள் எப்படி தங்கள் உடலை தயார் செய்துக் கொள்ள வேண்டும்?

nathan

பூப்பெய்தல் அடைவதற்கு முன் குழந்தைகள் சந்திக்கும் அறிகுறிகள்

nathan

ஆண்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் : விசித்திரமான சில உண்மைகள்…!

nathan

திங்கட்கிழமை டென்ஷனை குறைக்க 5 வழிகள்!

nathan

உடலுக்கு பலம் தரும் சர்க்கரைவள்ளி

nathan

தும்மலை கட்டுப்படுத்தும் இயற்கை வைத்தியம்

nathan

கவணம் இந்த அறிகுறிகள் எல்லாம் தெரிஞ்சா நுரையிரல கவனமா பாத்துக்கங்க!

nathan

அன்றாட பழக்கவழக்கம் உங்கள் விந்தணு உற்பத்தியை பாதிக்கிறதா??

nathan