29.5 C
Chennai
Wednesday, Jun 26, 2024
26 1477467557 earpain
மருத்துவ குறிப்பு

உங்கள் காது இந்த ஆபத்தான நோய்களின் அறிகுறிகளையெல்லாம் சொல்லும் என்பது தெரியுமா?

நமது உடலில் எந்த வித பாதிப்பு ஏற்பட்டாலும் உடல் அறிகுறிகளை வெளிப்படுத்திவிடும். இது காதுக்கும் பொருந்தும். காது நமது உடலின் உண்டாகும் பாதிப்புகளை அறிகுறிகளாக காண்பிக்கிறது. அவற்றை தெரிந்து கொள்ளுங்கள்

காதைப் பற்றி நாம் பெரிதாய் நினைப்பதில்லை. ஏனென்றால் அதனை இயற்கையே ஓரங்கட்டி விட்டது. ஆனால் நகம் , கண்கள் நமது ஆரோக்கியத்தை சொல்வது போல் காதும் சொல்லும் என்பது தெரியுமா?

ஆபத்தான உள்ளுறுப்புகளின் பாதிப்புகளைக் கூட நம் காது அறிகுறிகளை காண்பிக்கிறது. அவை எப்படியென பார்க்கலாம்.

இதய நோய் : காது குத்தும் இடம் மிருதுவாகவும் மடிப்பு இல்லாமலும் இருந்தால் அது ஆரோக்கியமான காது. ஆனால் அங்கு மடங்கி மடிப்பு போல் அல்லது பிளவு போல் இருந்தால் அது இதய நோய்களின் அறிகுறி என்று பல ஆய்வுகள் நிருபிக்கின்றன.

சர்க்கரைவியாதி : திடீரென காது கேட்கும் திறன் குறைந்தால், அது சர்க்கரைவியாதியின் அறிகுகளாக இருக்கலாம். இதற்கான சரியான காரணம் ஆய்வாளர்களுக்கு புலப்படவில்லையென்றாலும் ரத்த நரம்புகள் பாதிக்கப்படுவதால் சர்க்கரை வியாதி இருப்பாவ்ர்களுக்கு காது கேட்கும் திறன் குறையும் என்று சொல்கிறார்கள்.

தாடை அல்லது ஈறு சம்பந்தப்பட்ட வியாதி : காது வலி தொடர்ச்சியாக இருந்தால் காதில்தான் பிரச்சனை இருக்க வேண்டுமென்பதில்லை. தாடை மற்றும் பற்களில் அல்லது ஈறுகளில் பாதிப்பு ஏற்பட்டாலும் காது வலி உண்டாகும்.

ரத்தக் கொதிப்பு :
காதுகளில் ‘ரிங்’ கென்ற சப்தம் எழுகிறதா? உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறியாக இருக்கலாம். உடனே மருத்துவரை அணுகுங்கள்.

மனப்பதட்டம். மன அழுத்தம், ஆகிய்வற்றாலும் காதுகளில் இவ்வாறு சப்தம் வரும். மூளையில் கட்டி இருந்தாலும் இவ்வாறு சப்தம் எழலாம்.

அலர்ஜி : நுரையீரல் மற்றும் தொண்டையில் கிருமிகள் தொற்று உண்டானால் காது வலி உண்டாகும். மூக்கிற்கும் காதிற்கு பொதுவான பாதை ஒன்று உள்ளது. மூக்கின் வழியாக கிருமிகள் தொற்று ஏற்படும்போது காது அடைத்துக் கொள்ளும். வலி உண்டாகும்.

காது மெழுகு பாதுகாப்பிற்காக மட்டுமில்லை என தெரியுமா? காதில் உண்டாகும் மெழுகு வெறும் அழுக்கு தூசிகளில்ருந்து மட்டுமா பாதுகாக்கிறது என நினைக்கிறீர்கள். இல்லை.

அதனை வைத்து டி. என். ஏ விலிருந்து பல நோய்கள் வரை கண்டறியலாம். எவ்வாறு எச்சில், சளி நோயை கண்டறிய பயபடுகிறதோ அவ்வாறு காதில் சுரக்கும் மெழுகும் பயன்படுகிறது.

26 1477467557 earpain

Related posts

தைராய்டு பாதிப்பை அஜாக்கிரதையாய் எடுத்துக்காதீங்க! அதன் அறிகுறிகளும் , தீர்வும் !!

nathan

குழந்தையுடன் வெளிநாடு போறீங்களா..? – இதையெல்லாம் கவனிங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்காக நடக்கும் வகுப்புக்களினால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

அடிக்கடி புளித்த ஏப்பம் வருவது புற்றுநோயின் அறிகுறியா?

nathan

தூக்கத்தில் மாரடைப்பு ஏற்பட போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்

nathan

ஆஸ்டியோபோரோசிஸ்! எலும்புச் சிதைவு நோய்!

nathan

நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய் தயிர் பச்சடி

nathan

தேவையான முதலுதவி பற்றி அறிந்து வைத்திருப்போம்!படிக்கத் தவறாதீர்கள்

nathan

ஆண்களை காட்டிலும் பெண்கள் ஏன் அதிகம் அழுகிறார்கள் தெரியுமா?

nathan