சர்க்கரை நோயாளிகள் சம்பா கோதுமை ரவை உணவை அடிக்கடி எடுத்து கொள்வது நல்லது. சம்பா கோதுமை ரவை அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சத்தான சம்பா கோதுமை ரவை அடை
தேவையான பொருட்கள் :
சம்பா கோதுமை ரவை – 2 கப்
அரிசி மாவு – 1/4 கப்
வெங்காயம் பெரியது – 1
காய்ந்த மிளகாய் – 3-4
லவங்கம் – 1
சோம்பு – 1/4 ஸ்பூன்
உப்பு – சுவைக்கு
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை :
* சம்பா கோதுமை ரவையை 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், கறிவேப்பிலையை சிறிது வதக்கி வைக்கவும்.
* காய்ந்தமிளகாய், லவங்கம், சோம்பு கொஞ்சம் ஊறிய ரவை சேர்த்து மைய அரைத்துக்கொண்டு, மிச்சமுள்ள ரவை சேர்த்து ஒன்னும் பாதியுமாக அரைத்து அத்துடன் உப்பு, வதக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, அரிசிமாவு சேர்த்து அடை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
* சுவையான சத்தான சம்பா கோதுமை ரவை அடை ரெடி.