27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
24 1437733523 5 women
கர்ப்பிணி பெண்களுக்கு

எதிர்பாராத விதத்தில் கருத்தரிக்கும் போது நீங்கள் மறக்காமல் செய்ய வேண்டியவை!!!

சில சமயங்களில் நீங்கள் எதிர்பாராத போது அல்லது நீங்கள் கருத்தடை உபகரணங்கள் பயன்படுத்திய போதும் கூட கருத்தரிக்க வாய்ப்புகள் இருக்கிறது. அந்த சமயத்தில், கருவை கலைக்க மனமில்லாது, பிரசவிக்கலாம் என்று முடிவு செய்தால், உடனடியாக எதில் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும், அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்…..

உடல்நலம் ஆரோக்கியம் முக்கியமாக உங்களது உடல்நலம் மற்றும் ஆரோகியத்தின் மீது அதிக அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். சரியான உணவு, ஊட்டச்சத்து நிறைந்த உணவு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்., இது, உங்கள் நலத்திற்கும், உங்கள் வயிற்றில் வளரும் சிசுவின் நலத்திற்கும் மிகவம் அவசியமானது.

உடல் எடை
மிக அதிகமாகவும் உடல் எடை இருக்க கூடாது, மிக குறைவாகவும் இருக்ககூடாது. ஒவ்வொரு மாதமும் உடல் எடையை மருத்துவரின் ஆலோசனையுடன் சரி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இது, பிரசவ காலத்தில் பிரச்சனை ஏற்படாமல் இருக்க உதவும்.

சேமிப்பு இதற்கு இணையாக உங்களது சேமிப்பும் அவசியம். முன்பு போல தற்போதைய நிலை இல்லை. மருத்துவத்தில் தொட்டதற்கு எல்லாம் பணம் தான். மற்றும் பிறந்த குழந்தையின் உடல்நிலை பாதுகாப்பு மருத்துவ செலவுகள் நிறைய இருக்கும். அதற்கு ஏற்ப பணம் சேமித்து வைக்க வேண்டியது அவசியம்.

தீயப்பழக்கங்கள் வேண்டாம் கருத்தரித்துள்ள பெண் இருக்கும் இடத்தில் புகை, மது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இது, குழந்தையின் நலனையும் பாதிக்கும்.

நல்ல சூழல் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நல்ல சூழல் தேவைப்படும். எனவே, அதிக சத்தம், இரைச்சல் இல்லாத, அமைதியான சூழலை ஏற்படுத்தி தர வேண்டியது அவசியம். மற்றும் சுற்றுசூழல் மாசுபாடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குறைந்தது வீட்டையாவது சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், எளிதில் தொற்று மற்றும் நோய் கிருமிகள் அண்டும் அச்சம் இருக்கிறது.

24 1437733523 5 women

Related posts

பிரசவ கால சிக்கல்கள். தவிர்க்க 7 வழிகள்!

nathan

ஆண் குழந்தை ரகசியம்

nathan

கர்ப்பகால சர்க்கரை நோய்க்கு சாப்பிட வேண்டியவை

nathan

பிறந்த குழந்தையை தூக்குவது எப்படி?

nathan

‘வலி’ இல்லா பிரசவத்துக்கு வழி!

nathan

கர்ப்பிணிகள் எதிரில் பேச கூடாத வார்த்தைகள்

nathan

கர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்தசோகை சிசுவை பாதிக்குமா?

nathan

கர்ப்பம் – குழந்தை பிறப்பு பற்றிய சில மூட நம்பிக்கைகள்

nathan

கர்ப்பிணிகள் கவனிக்க வேண்டியவை ?

nathan