முகத்தின் பளிச் தோற்றத்திற்கு விரல் யோகாவை எப்படி செய்வது என்று கீழே விரிவாக பார்க்கலாம்.
முகத்தின் பளிச் தோற்றத்திற்கு விரல் யோகா
* வலது கையை நீட்டி கட்டை விரலை உயர்த்தி இரண்டு கண்களுக்கும் இடையில் பிடித்துக் கொள்ளவும். வலது பக்கமாக கட்டை விரலை முடிந்த அளவுக்கு திருப்பவும். தலை திரும்பக் கூடாது.
கண்கள் மட்டுமே கட்டை விரல் செல்லும் திசை நோக்க வேண்டும். அதே மாதிரி இடது கை பெரு விரலை வைத்துக் கொண்டு இடது பக்கமாக பார்வையை முடிந்த அளவுக்கு கொண்டு செல்லவும்.
முடிந்ததும் மேலிருந்து கீழும் கீழிருந்து மேலும் பிறகு கண்களுக்கு நெருக்கமாகவும், தள்ளி வைத்துக் கொண்டும் அதோ மாதிரி பார்வையை சுழற்றவும். இது கண்களுக்கான அற்புதப் பயிற்சி. கண்களை சுற்றியுள்ள கரு வளையங்கள் சுருக்கங்கள் மறையும்,கண் பார்வை தெளிவாகும்.
* தைராய்டு பிரச்சினை உள்ளவர்களின் முகம் எப்போதும் சோகமாக காணப்படும் பொலிவற்ற அவர்களின் முகத்தை பளபளப்பாக மாற்ற விரல் யோகா சிகிச்சை மிகவும் பயன்தரும்.
பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்த வைத்துக் கொண்டு சம்மணமிட்டபடி அமரவும். பின் கண்களை மூடிக் கொண்டு மேலும் கீழும் ஆட்டவும். கண்களை மூடிக் கொண்டு செய்வது தான் நல்லது.
அடிக்கடி கோபப்படுகிறவர்களின் முகத்தில் பொலிவு இருக்காது. அழகும் இருக்காது. கோபம் தலைக்கேறும் போது கண்களை மூடிக்கொண்டு மூச்சை மூன்று முறை உள்ளிழுக்கவும். 20 வரை எண்ணவும் பின் பொறுமையாக மூச்சை வாய் வழியாக வெளியே விடவும். இதனால் கோபத்தை தூண்டுகிற அட்ரீனலின் சுரப்பி அமைதி அடைந்து கோபம் தணிந்து முகம் பொலிவு பெறும்.
* பற்களைக் கடித்துக்கொண்டு அவற்றுக்கு இடையே உள்ள இடைவெளி மூலம் மூச்சை உள் இழுக்கவும்.
பின் பொறுமையாக மூச்சை மூக்கின் வழியே வெளியேற்றவும். காலையும் மாலையும் தவறாது இந்தப் பயிற்சியை ஐந்து முறை செய்தால் முகம் பொலிவடையும். நாக்கை நீட்டி குழல் மாதிரி மடிக்கவும்.மடிப்பிற்கிடையே உள்ள இடைவெளி மூலம் மூச்சை உள் இழுத்து வாயை மூடவும். பொறுமையாக மூக்கின் வழியே மூச்சை வெளியே விடவும்.
நாக்கை நீட்டி உள்பக்கமாக மடக்கவும். அந்த இடைவெளி வழியாக மூச்சை உள்ளிழுத்து வாயை மூடவும். இந்த இரண்டு பயிற்சிகளும் முகத்தை பளிச்சென்று வைத்திருக்கும். இதயத்துக்கும் ஆரோக்கியம் கிடைக்கும்.