26 C
Chennai
Wednesday, Nov 13, 2024
ht444623
எடை குறைய

எகிறுது எடை… என்னதான் செய்வது?

சாதாரணமாக ஒன்றரை வயது குழந்தையின் எடை எவ்வளவு இருக்கும்? 9 கிலோவிலிருந்து 11 கிலோ வரை எடை இருக்கக்கூடும். 18 மாதங்களே ஆன ஒரு குழந்தையின் எடை 22 கிலோ என்றால்..? பிறந்தபோது 2 கிலோவாக இருந்த எடை, முதல் 6 மாத காலத்திலேயே 4 கிலோ அதிகரித்து, 10வது மாதத்தில் 17 கிலோவானது. இப்போது 22 கிலோ எடையுள்ள ஸ்ரீஜித் ஹிங்கன்கரின் வயது 18 மாதங்கள். இந்தக் குழந்தைக்கு ‘லெப்டின் குறைபாடு’ இருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

அப்படியென்றால்? மூளையில் உள்ள லெப்டின் ஹார்மோன் நாம் சாப்பிட்டதும் வயிறு நிரம்பிய உணர்வை மூளைக்கு கொண்டு செல்லும். இந்த ஹார்மோன் உற்பத்தி குறையும்போது வயிறு நிரம்பிய உணர்வை மூளை உணராமல், மேலும் மேலும் பசி உணர்வு தூண்டப்பட்டு அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் பருமன் நோய் ஏற்படும்.

இதுதான் லெப்டின் டிஸ்ஆர்டர்! இதைப் பற்றி அறிய, தற்போது ஸ்ரீஜித்திற்கு சிகிச்சை அளித்துவரும் குழந்தைகள் நல மருத்துவரும், என்டோகிரைனாலஜிஸ்ட்டுமான மும்பை மருத்துவர் அபிஷேக் குல்கர்னியை தொடர்பு கொண்டோம்…

“இந்தியாவில், இந்த அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட இரண்டாவது குழந்தை ஸ்ரீஜித் ஹிங்கன்கர். லெப்டின் மாறுபாடு அல்லது லெப்டின் ஹார்மோன் உற்பத்தி குறைபாட்டுக்கு இந்தியாவில் சிகிச்சை கிடையாது. இக்குழந்தையின் ஹார்மோன் பிரச்னையை கட்டுப்படுத்த ஒரு நாளைக்கு இரு முறை லெப்டின் ஹார்மோன் செலுத்தப்படவேண்டும். இது இங்கிலாந்தில் உள்ள ஆடன்ப்ரூக் மருத்துவமனையில் மட்டுமே கிடைக்கும்.

ஸ்ரீஜித்திற்கு ஏற்பட்டுள்ள இந்த அரியவகை நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை எனில், அடிக்கடி நோய்தொற்றுகள் மற்றும் உடல்நலக்குறைபாடுகள் ஏற்படும். ஓராண்டுக்கு முன் கர்நாடகாவை சேர்ந்த ரிஷா அமாரா என்னும் 9 மாத பெண்குழந்தை இவ்வகை அரிய நோயினால் பாதிக்கப்பட்டு, 18 கிலோ எடைஉடன் சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்டாள். அக்குழந்தையும் கேம்பிரிட்ஜ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறாள்.

இப்போது 16 கிலோவாக எடை குறைந்து விட்டது. இப்போது நம் நாட்டிலும் லெப்டின் மாறுபாட்டு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்து உற்பத்திக்கான முயற்சியில் இறங்கியுள்ளோம். மரபணு காரணமாக வரக்கூடிய இந்நோய்க்கான மருந்து விரைவில் இந்தியாவிலேயே கிடைக்கும்”என்று நம்பிக்கை ஊட்டுகிறார் அபிஷேக் குல்கர்னி. ht444623

Related posts

சூப்பர் டிப்ஸ்! உடல் எடையைக் வேகமாக குறைக்க வேண்டுமா : இதில் ஒன்றை முயற்சி செய்யுங்கள்!!

nathan

எடை குறைப்பு இப்போ ரொம்ப ஈஸி

nathan

உடல் பருமனால் ஆண்மை குறைபாடு ஏற்படுமா?, weight loss tips in tamil

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…திருமணத்திற்கு பின் பெண்கள் உடல் எடை அதிகரிப்பது ஏன் தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த பொருளை நாக்கின் அடியில் வைத்தால் உடல் எடை வேகமாக குறையும்!

nathan

பிட்னஸ் டிராக்கர் உடல் எடையைக் குறைக்க உதவுமா?

nathan

எடை குறைய எளிதான எட்டு வழிகள் !

nathan

உடல் எடை குறைக்க வேண்டுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா எடையைக் குறைக்க இரவு நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan