25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
அழகு குறிப்புகள்உதடு பராமரிப்பு

லிப்ஸ்டிக் போடும் போது கவனிக்க வேண்டியவை

ld1328வெள்ளை நிற பெண்கள் ஆரஞ்ச், சிவப்பு, பிரவுன் உள்ளிட்ட நிறத்தில் லிப்ஸ்டிக் தேர்ந்தெடுக்கலாம். மாநிறமாக இருக்கும் பெண்கள் லைட் பிரவுன்,  லைட் செர்ரி நிற லிப்ஸ்டிக் தேர்ந்தெடுக்கலாம்.

பகல் நேரத்தில் இளநிறத்திலும், மாலை நேரத்தில் அடர் நிறத்திலும் பூசுங்கள்.  அதிக குளிரும் சரி, அதிக வெயிலும் சரி இரண்டுமே லிப்ஸ்டிக்குக்கு  எதிரிகள் காரணம் உதடுகள் எளிதில் வறண்டு விடும்.

பொதுவாக லிப்ஸ்டிப் போடுவதற்கு முன் தேங்காய் எண்ணெயை உதடுகளில் தடவி 10  நிமிடம் கழித்து வெது, வெதுப்பான வெந்நீரில் ஒரு துணியை நனைத்து, உதடுகளை துடைத்த பின்பு லிப்ஸ்டிக் போடுவது நல்லது.ஒரு லிப்ஸ்டிக்கை ஆறு மாதத்திற்கு மேல் பயன்படுத்தக் கூடாது. இது உதடுகளின் தன்மையை பாதித்து விடும். லிப்ஸ்டிக் பூசிய பிறகு உதட்டால்  ஈரப்படுத்துவதையும், பானங்கள் குடிப்பதையும் தவிர்க்கவேண்டும்.

லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பு லிப் பென்சிலால் லிப்ஸ்டிக் போட வேண்டிய பகுதியில் அவுட்லைன் போடவேண்டும். மெலிதான உதடுகள்  கொண்டவர்கள் உதடுகளின் வெளிப்பகுதியில் அவுட் லைன் வரையவேண்டும், பருமனான உதடுகள் உள்ள பெண்கள் உதடுகளின் உள் பகுதியிலேயே  அவுட் லைன் போடவேண்டும்.

இரவு படுக்கச் செல்வதற்கு முன்பு உதடுகளில் வாசலைன் தடவிக் கொள்ளலாம். லிப்ஸ்டிக் தடவுவதற்கு முன்பு வாசலைன் உபயோகித்தாலும்  உதடுகள் பளபளக்கும்.

அதிகமாக லிப்ஸ்டிக் போட்டுவிட்டால் டிஸ்யூ பேப்பரால் ஒத்தி எடுத்து அகற்றுங்கள். துணிகளாலும், கைகளை பயன்படுத்தி அகற்றுவதை  தவிர்க்கவேண்டும்.

Related posts

வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான ஃபேஷ் பேக்குகள்

nathan

மழைக்காலத்தில் பாதங்களை பராமரிப்பது எப்படி?

nathan

முகத்திற்கு பேஸ்பேக்

nathan

வெளிவந்த தகவல் ! என்னது விஜய் காப்பி அடித்து தன் நீலாங்கரை வீட்டை கட்டினாரா ?

nathan

முதுமையில் ஆரோக்கியமாய் வாழ இளமையில் செய்ய வேண்டியவை ?தெரிஞ்சிக்கங்க…

nathan

மஞ்சள் பூசிக்கொள்வதால் பயன் உண்டா?

nathan

வீட்டில் உள்ள அற்புதமான சில பொருள்கள் கொண்டு கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகளை நீக்க முடியும்!…

sangika

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கான கோடைக்கால ஃபேஸ் பேக்குகள்

nathan

வீட்டிலிருந்தே கண்களைப் பாதுகாக்கும் எளிமையான இயற்கை வழிமுறைகளை பார்க்கலாம்.

nathan