குளிர்காலத்தில் சருமம் மற்ற பருவங்களைக் காட்டிலும் பாதிக்கப்படுவது உண்மைதான். குளிர்காற்றினால் சருமம் வறண்டுவிடும்.
தோலில் போதுமான அளவு ஈரப்பதம் இல்லாததால், உங்களுடைய முகம் மற்றும் உடல் பகுதிகளில் அரிப்புகள் ஏற்படும். சுருக்கங்கள் எரிச்சல் உண்டாகும். முகத் தசைகள் மிகவும் இறுக்கமாக காணப்படும்.
ஏனென்றால் குளிர்ச்சியான காற்று சருமத்தில் உள்ள ஈரப்பசையை முற்றிலும் உறிஞ்சிக் கொள்ளும். இதனால் சருமத்தில் ஈரத்தன்மை குரைந்து வறண்டு போய் விடுகிறது.
ஆகவே குளிர்காலத்தில் சருமத்தை முறையாக பராமரிப்பது அவசியமாகிறது. சரியாக பராமரிக்காவிட்டால், சருமத்தில் வெடிப்புகள் மற்றும் வெள்ளைத் திட்டுக்கள் உண்டாகிவிடும்.
நம் உடல் உறுப்புக்களை பாதுகாக்கும் கவசமாக இருக்கும் சருமத்தை எப்படி குளிர்காலத்திலிருந்து மீட்டெடுக்கலாம் என பார்க்கலாம்.
அவகாடோ : அவகேடோ குளிர்காலத்தில் அதிகம் கிடைக்கக்கூடிய பழம். ஆகவே அந்த பழத்தை அரைத்து, அதில் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, ஈரமான சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் ஈரப்பசையானது நீங்காமல் இருக்கும்.
தேன் மற்றும் பால் : தேங்காய் எண்ணெய் , பால் மற்றும் தேனை ஒன்றாக கலந்து, அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 3-4 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
முட்டையின் வெள்ளைக் கரு : முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு அடித்து, அதில் ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன் கலந்து, அந்த கலவையை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால், சருமம் வறட்சியின்றி, மென்மையாகவும், சுருக்கங்களின்றியும் இருக்கும்.
வாழைப்பழம் மற்றும் தயிர் : வாழைப்பழத்தை நன்கு மசித்து, அதில் சிறிது தேன் மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் குளிர்காலத்தில் ஏற்படும் பாதிப்பில் இருந்து சருமத்தை பாதுகாக்கலாம்.
பப்பாளி மற்றும் பால் : பப்பாளியை மசித்து, அதில் சிறிது பால் சேர்த்து கலந்து, 10 நிமிடம் மசாஜ் செய்து கழுவ வேண்டும். இத்தகைய ஃபேஸ் பேக்குகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.