29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
29 1467183885 8 lemon amla
தலைமுடி சிகிச்சை

ஆண்களே! இதோ வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கும் சில நாட்டு வைத்திய வழிகள்!

தலைமுடி உதிர்வது, வழுக்கை ஏற்படுவது போன்றவை இன்றைய தலைமுறையினரின் பெரும் பிரச்சனையாக உள்ளது. 70 சதவீத ஆண்கள் இளம் வயதிலேயே வழுக்கை தலையைப் பெற்றுவிடுகின்றனர். ஆண்களுக்கு வழுக்கை தலை ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக இருப்பது பரம்பரை அல்லது ஆண் செக்ஸ் ஹார்மோன்கள் தான்.

இதனால் ஆரம்பத்தில் தலைமுடி அதிகம் உதிர ஆரம்பித்து, நாளடைவில் அது வழுக்கையை உண்டாக்கிவிடும். எனவே ஆண்கள் தங்களுக்கு தலைமுடி உதிர ஆரம்பிக்கும் போதே உஷாராகிக் கொள்ள வேண்டும். அதற்கு தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் இயற்கை வழிகளைப் பின்பற்ற வேண்டும்.

இங்கு வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கும் சில நாட்டு வைத்திய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றைப் பின்பற்றி வந்தால், நிச்சயம் வழுக்கை ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

தேங்காய் பால் தேங்காய் பாலைக் கொண்டு அடிக்கடி ஸ்கால்ப்பை மசாஜ் செய்து வர, மயிர்கால்களுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, மயிர்கால்கள் வலிமையடைந்து, தலைமுடி உதிர்வது தடுக்கப்படும்.

தேங்காய் எண்ணெய், நெல்லிக்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு 20 மிலி தேங்காய் எண்ணெயுடன், 1/0 மிலி நெல்லிக்கய் எண்ணெய் மற்றும் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ பொடுகு நீங்கி, முடி உதிர்வது குறையும்.

வெந்தயம் மற்றும் தேங்காய் எண்ணெய் 1 டீஸ்பூன் வெந்தயத்தை தேங்காய் எண்ணெயில் போட்டு சிறிது நேரம் வறுத்து, பின் அந்த எண்ணெயை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி வாரத்திற்கு 3-4 முறை தலைக்கு தடவி மசாஜ் செய்து, சீகைக்காய் அல்லது மைல்டு ஷாம்பு போட்டு அலசி வர, முடி உதிர்வது குறைந்து, வழுக்கை ஏற்படுவது தடுக்கப்படும்.

நெல்லிக்காய் உலர்ந்த நெல்லிக்காயை தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, அந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவி வந்தால், தலைமுடியின் வளர்ச்சி மேம்படுவதை நன்கு காணலாம்.

மருதாணி இலைகள் மருதாணி இலைகளை தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயில் போட்டு சிறிது நேரம் சூடேற்றி, பின் அதனை இறக்கி குளிர வைத்து, அந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவி வர, தலைமுடி வலிமையடைந்து, உதிர்வது குறையும்.

தயிர் மற்றும் கடலை மாவு 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவுடன் 2-3 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், தலைமுடி உதிர்வதைக் குறைக்கலாம்.

வெங்காயம் வெங்காயத்தை துண்டுகளாக்கி, அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை ஸ்கால்ப்பில் படும்படி தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சொட்டை தலையிலும் தலைமுடியை வளரச் செய்யலாம்.

நெல்லிக்காய் சாறு மற்றும் எலுமிச்சை சாறு நெல்லிக்காய் சாறு மற்றும் எலுமிச்சை சாற்றினை சரிசம அளவில் எடுத்துக் கொண்டு ஒன்றாக கலந்து, ஸ்கால்ப்பில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இதன் மூலமும் தலைமுடி உதிர்வது குறையும்.

கொய்யா இலை
சிறிது கொய்யா இலைகளை நீரில் போட்டு நிறம் மாறும் வரை நன்கு கொதிக்க வைத்து, பின் அந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால் முடியின் வளர்ச்சியில் மாற்றம் தெரியும்.

எலுமிச்சை மற்றும் மிளகு எலுமிச்சை சாற்றில் மிளகுத் தூள் சிறிது சேர்த்து கலந்து, வழுக்கையாக இருக்கும் இடத்தில் தடவி வந்தால், அவ்விடத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மயிர்கால்களின் வளர்ச்சி தூண்டப்படும்.

முட்டை ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை தனியாக எடுத்துக் கொண்டு, அத்துடன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து, தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச, தலைமுடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரும்.

29 1467183885 8 lemon amla

Related posts

உருளைக்கிழங்கு தோலை கொண்டு புதிய முடிகளை வளர செய்யும் டிரிக்ஸ்!

nathan

தலைமுடியில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்க சில சூப்பர் டிப்ஸ்…

nathan

முடி உதிர்கின்றது என்ற கவலையா? இயற்கை முறையில் உடனடித்தீர்வு!

nathan

உங்களுக்கு முடிகொட்டிய இடத்தில் ஒரே வாரத்தில் முடி வளர வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

காய்கறி ஹேர் டை பயன்படுத்தினால் இவ்வளவு பலன்களா..?!

nathan

கூந்தலில் நுனி பிளவா? பப்பாளி பேக் ட்ரை பண்ணுங்க

nathan

நரை முடியை கறுப்பாக்க – grey hair a thing the past after

nathan

இள வயதில் முடி நரைப்பதற்கான காரணங்கள்

nathan

எவ்வித பக்கவிளைவும் இல்லாத ஷாம்பூ கண்டிஷனர் மாஸ்க்

nathan