குட்டிக் குழந்தையுடன் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும்போது, குழந்தையின் உணவு, உடை, ஆரோக்கியம் மற்றும் அலுவல் நடைமுறைகள் சார்ந்து கவனம் கொடுக்க வேண்டிய விஷயங்கள் பற்றிச் சொல்கிறார், சிங்கப்பூரில் வசிக்கும் நம் வாசகி பிருந்தா. பலமுறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட தன் அனுபவத்தில் இருந்து அவர் தரும் குறிப்புகள் இவை…
தட்பவெப்பம்
முதலில் நீங்கள் பயணம் மேற்கொள்ளவிருக்கும் நாட்டைப் பற்றிய தகவல்களை இணையத்தில் படித்துப்பாருங்கள். அப்போதுதான் உங்கள் குழந்தைக்கு அங்கு நிலவும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப என்னென்ன பொருட்களை எடுத்துச் செல்லலாம், எவையெல்லாம் தேவையில்லை என்பதை கணிக்க முடியும்.
பாஸ்போர்ட்
குழந்தை பிறந்தவுடன் பாஸ்போர்ட் எடுத்திருந்தால், ஐந்து வயது பிறப்பதற்கு முன்னர் அதைப் புதுப்பிக்க வேண்டும். விசா அப்ளை செய்யும் முன் குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்னர் வெளிநாடு செல்லும் அனைவரின் பாஸ்போர்ட்டையும், அதன் புதுப்பிக்கும் தேதியையும் சரிபார்த்துவிடுவது நல்லது.
விமானப் பயணச்சீட்டு
இரண்டு வயதுக்கு உட் பட்ட குழந்தைகளுக்கு விமானப் பயணச்சீட்டின் விலையில் 10% செலுத்தி னால் போதும். இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முழுக் கட்டணம் செலுத்த வேண்டும். பயணச்சீட்டு பெறும்போது பயணக் காப்பீடு (இன்ஷூரன்ஸ்) எடுத்துக்கொள்வது நல்லது. டிக்கெட் புக்கிங் கின் போது குழந்தையைப் படுக்கவைக்கும் வசதி கொண்ட இருக்கையாகப் பார்த்து புக் செய்யவும். பொதுவாக ஒரு விமானத்தில் இதுபோன்ற இருக்கைகள் 2 அல்லது 3 மட்டுமே இருக்கும் என்பதால், முந்துபவர் களுக்கே முன்னுரிமை.
உணவில் கவனம்
குழந்தை வழக்கமாகச் சாப்பிடும் உணவு சென்றிருக்கும் நாட்டில் கிடைக்காத சூழலில், பிஸ்கட், பிரெட் என வயிற்றுக்குத் தொல்லை தராத உணவுகளாகக் கொடுங்கள்.
உடைகள்
குழந்தைக்கான ஷூ, சாக்ஸ், நீச்சல் உடைகள், ஸ்விம்மிங் டயப்பர், சோப்பு, ஷாம்பு, குளிர் பிரதேசங்களுக்குச் செல்லும் போது ஜெர்கின், ஓவர்கோட் என்று தேவைப்படும் அனைத் தையும் எடுத்துக்கொள்ளவும். குழந்தைகளுக்கான ஆடைகள் பளிச் நிறத்தில் இருந்தால், கூட்டத்தில் உங்கள் குழந்தையை அடையாளம் காண வசதியாக இருக்கும். கனமான ஆடை களைத் தவிர்க்கவும்.
மருத்துவ ஆவணங்கள்
குழந்தை பிறந்து 15 நாட்களுக்குப் பிறகு, மருத்துவரின் அனுமதிச் சீட்டோடு விமானத் தில் பயணிக்கலாம். சில நாடு களில் இது செல்லாது. பிறந்து 3 மாதங்கள் பூர்த்தியான குழந்தை மட்டுமே விமானப் பயணத்துக்கு அனுமதிக்கப்படும். எந்த நாட்டுக்குச் செல்கிறீர்களோ, அந்நாட்டில் போடப்படுகிற தடுப்பூசியை உங்கள் மருத்துவரிடம் கேட்டறிந்து, 5 வாரங்களுக்கு முன்பே உங்களுக்கும் குழந்தைக்கும் போட்டுக்கொள்ளுங்கள். இல்லையென்றால், நீங்கள் சென்று இறங்கியதும் மருத்துவப் பாதுகாப்புக் காரணங்களுக்காக உங்களைத் தனிமைப்படுத்தி கேள்விக்கு உட்படுத்தலாம். தடுப்பூசி போட்டதற்கான நகல் நிச்சயமாக உங்களிடம் இருக்க வேண்டும். குழந்தையின் மருத்துவ ரெக்கார்டுகள், தடுப்பூசி அட்டை, உங்கள் குழந்தை மருத்துவர் குழந்தைக்குத் தேவைப்படக்கூடிய மருந்துகளைப் பரிந்துரைத்து எழுதித் தந்த ப்ரிஸ்கிரிப்ஷன் போன்றவற்றை எடுத்துச் செல்லவும்.
தின்பண்டங்கள்
பல அறைகளைக் கொண்ட தோள்பையில், டயப்பர், வெட் டிஷ்யூ பேப்பர், குழந்தைக்குப் பிடித்த பொம்மை, சின்ன போர்வை, குடை, பால் பவுடர், பால் பாட்டில், தண்ணீர், பிஸ்கட் போன்ற பொருட்களை எடுத்துக்கொள்ளவும். சற்று வளர்ந்த குழந்தைகளாக இருந்தால் வாழைப்பழம், பிஸ்கட், ஆப்பிள், உலர்ந்த பழங்கள் என்று குழந்தையின் பசியை சமாளிக்கக்கூடிய உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ளவும்.
தங்கும் விடுதிகள்
நீங்கள் சுற்றிப் பார்க்கும் இடத்துக்கும் தங்கியிருக் கும் விடுதிக்கும் அதிக தூரம் வேண்டாம். குழந்தை அழுது கொண்டே இருந்தால் விடுதிக்குத் திரும்ப அதிக நேரம் எடுத்துக்கொள்ளாத அளவுக்கு அதைத் தேர்ந் தெடுங்கள். விடுதி அதிக தூரத்தில் இருந்தால் அதுவே குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் அசதியைத் தரும்.
கைடு புத்தகம் கட்டாயம்
சுற்றுலா செல்லும் பட்சத்தில், ஓய்வில்லாமல் பல இடங்களையும் சுற்றிப்பார்க்கிற ஆர் வத்தில் குழந்தைகளை சோர்வாக்கிவிடாமல், அவர்களுக்கு சௌகரிய மான இடத்துக்கு அழைத்துச் செல்லுங்கள். அதற்கு முன் அந்நாட்டின் கைடு புத்தகம், மேப், இன்ஃபர்மேஷன் சென்டர் பற்றிய விவரம் போன்ற வற்றை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.
விமானத்தில் உதவி
விமானத்தில் குழந்தைக்கு வெந்நீர் தருவது, அழும் குழந்தையை தோளில் கிடத்தி நடந்துகொண்டே தட்டிக்கொடுக்க அனுமதிப்பது, வாந்தி எடுத்தால் சுத்தம் செய் வது என்று தேவைப்படும் அடிப்படை உதவிகள் கிடைக்கும். எனவே, கவலை வேண்டாம். எந்த விமானத்தில் பயணிக்கிறீர்களோ அந்த விமானத்தின் சேவை கையேட்டை ஒன்றுக்கு இரண்டு முறை தெளிவுறப் படித்து விடுவது நல்லது. பயணச் செலவினங்களை ஓரளவுக்கு கணித்து, அதற்கேற்ப செல்ல விருக்கும் நாட்டுப் பணத்தை மாற்றி வைத்துக்கொள்வதும் சிறப்பு.
முதல் உதவிப்பெட்டி
மருத்துவரின் ஆலோசனையின் பேரில் காய்ச்சல், ஜலதோஷம், சைனஸ் பிரச்னைகளுக்கான மருந்துகள் அடங்கிய முதல் உதவிப் பெட்டி, கையோடு இருக்கட்டும்.