26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
201610261351086168 What are the reasons for hemorrhoids SECVPF
மருத்துவ குறிப்பு

மூலநோய் வருவதற்கான காரணங்கள் என்ன?

மூலநோய் வருவதற்கான காரணங்கள், அறிகுறிகள் என்னவென்று கீழே பார்க்கலாம்.

மூலநோய் வருவதற்கான காரணங்கள் என்ன?
நாற்பது வயதைக் கடந்த ஆண், பெண் இரு பாலருக்கும் ஏற்படுகிற நோய்களுள் ‘மூலநோய்’ (Piles) முக்கியமானது. இந்த நோய் வந்தவர்களில் பெரும்பாலோர் வெளியில் சொல்ல வெட்கப்பட்டு முறையான சிகிச்சையை எடுக்கத் தவறுவதால், பின்னாளில் கடுமையான மலச்சிக்கல், ஆசனவாயில் வலி, ரத்தப்போக்கு, ரத்தசோகை எனப் பல துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள்.

காரணங்கள் :

மலச்சிக்கல் மூலநோய்க்கு முக்கியக் காரணம். மலச்சிக்கலின் போது மலத்தை வெளியேற்றுவதற்கு முக்கவேண்டி இருப்பதால், அப்போது ஆசனவாயில் அழுத்தம் அதிகரித்து மூலநோயைத் தோற்றுவிக்கும்.

ஆண்களுக்கு ஏற்படுகிற சிறுநீர்த்தாரை அடைப்பு, புராஸ்டேட் வீக்கம் போன்றவற்றாலும் இம்மாதிரி அழுத்தம் அதிகமாகி மூலநோய் உண்டாகிறது.

வயிற்றில் உருவாகும் கட்டிகள், மலக்குடலில் உருவாகும் புற்றுநோய்க் கழலைகள் மற்றும் கொழுத்த உடல் போன்றவையும் மூலநோயை ஏற்படுத்தும்.

கர்ப்பிணியின் வயிற்றில் குழந்தை வளர வளர அடிவயிற்றில் இருக்கும் உறுப்புகள் கீழ்நோக்கித் தள்ளப்படுவதால், அவை ஆசனவாய் சிரைக்குழாய்களை அழுத்தி வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக சில பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் மட்டும் தற்காலிகமாக மூலநோய் வருகிறது.

சிலருக்குப் பரம்பரை காரணமாக ஆசனவாயில் உள்ள சிரைக்குழாய்கள் மிக மெல்லியதாக இருக்கும். இதனாலும் மூலநோய் வரலாம். நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து குறைந்த உணவு வகைகளைச் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு, மாமிச உணவு வகைகளையும் விரைவு உணவு வகைகளையும் அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு, மூலநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

புகைபிடிப்பதும் மது அருந்துவதும் போதைப்பொருள்களை உபயோகிப்பதும் ரத்தக்குழாய்களைப் பாதிப்பதால், இப்பழக்கம் உள்ளவர்களுக்கு மூலநோய் எளிதில் வந்துவிடும்.

அறிகுறிகள் :

ஆசனவாயில் சிறிய வீக்கம் தோன்றும், வலி இருக்காது. அடுத்த நிலையில் மலம் கழிக்கும்போது லேசாக ரத்தம் கசியும். அல்லது மலத்தோடு வரிவரியாக ரத்தம் வெளிப்படும். சில வாரங்களில், அந்த நபருக்கு மலம் கழித்த பின்னர் சொட்டுச் சொட்டாக ரத்தம் வெளிவரும். சிலருக்கு வீக்கம் பெரிதாகி நிலைத்துவிடும். அப்போது அடிக்கடி ஆசனவாயில் வலியை ஏற்படுத்தும்.

அந்த வீக்கத்தில் புண் உண்டாகி, அரிப்பு, வலி தொல்லை தரும். அதனால் மலம் கழிப்பதில் சிரமம் உண்டாகும், மலச்சிக்கல் ஏற்படும். ‘முள்ளின் மீது உட்கார்ந்திருப்பதைப் போன்ற அவதி’ என்று சொல்வது, இதற்கு மிகவும் பொருந்தும். ஆசன வாயில் வெடிப்பு (Anal fissure) புண், சுருக்கம் இருந்தாலும் இந்த மாதிரியான வலி, தொல்லையைத் தரும்.

மூலநோய் அறிகுறிகளை நான்கு நிலைகளாக மருத்துவர்கள் பிரித்திருக்கிறார்கள். காரணம், இந்த நோய்க்குப் பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. அவற்றில் எந்தச் சிகிச்சை முறை குறிப்பிட்ட நோயாளிக்கு நல்ல பலனைத் தரும் என்று முடிவு செய்வதற்கு இது உதவும். மூலநோயின் நிலைக்கு ஏற்ப சிகிச்சை தரப்பட்டால் மட்டுமே, நோய் முழுவதுமாக குணமாகும். அப்படி இல்லாதபோது மூலநோய் மீண்டும் வந்துவிடும்.

சிகிச்சை முறைகள் :

மூலநோய்க்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற்றுக்கொண்டால் மருந்து, மாத்திரை, களிம்புகளில் குணப்படுத்திவிடலாம். முக்கியமாக, மலச்சிக்கலுக்கு சரியான சிகிச்சை பெற்றுவிட்டால் போதும். மூலநோயும் விடைபெற்று விடும். மூலநோய்க்குப் பல்வேறு சிகிச்சைமுறைகள் உள்ளன. அவை:

1. சுருங்க வைத்தல் 2. வளையம் இடுதல் 3. உறைய வைத்தல் 4. அறுவைச் சிகிச்சை 5. கதிர்வீச்சு சிகிச்சை 6. லேசர் சிகிச்சை 7. ஸ்டேப்ளர் சிகிச்சை. நோயாளியின் தேவைக்கேற்ப இவற்றில் ஒன்றை மருத்துவர் தேர்வு செய்வார்.201610261351086168 What are the reasons for hemorrhoids SECVPF

Related posts

உங்களுக்கு தெரியுமா உறக்கத்தில் எத்தனை வகை., எத்தனை நிலைகள் உள்ளது?

nathan

உங்கள் கண்களில்ஏதும் பிரச்சனைகள் உள்ளதா?அப்ப இத படிங்க!

nathan

முளையிலேயே கிள்ளவேண்டிய பிடிவாதம்!

nathan

உங்க லவ் நம்பர் உங்களை பற்றி என்ன சொல்லுதுன்னு தெரிஞ்சுக்கனுமா? இதப் படிங்க!

nathan

தூக்கமே வரலன்னு புலம்பிட்டே இருக்கீங்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

டயட்’டில் பெண்களின் முன்னழகு பாதிக்கிறதா? தப்பிக்க என்ன செய்யலாம்?

nathan

புதினா… மணத்துடன் மருத்துவ குணமும்

nathan

மரண வலையில் சுலபமாக விழும் மனிதர்கள்

nathan

இரட்டைக் குழந்தைகள் உருவாவது எப்படி?

nathan