30.3 C
Chennai
Wednesday, Jul 16, 2025
201610270744133712 how to make Chilli baby corn SECVPF
சிற்றுண்டி வகைகள்

குழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பேபிகார்ன்

சில்லி பேபிகார்ன் கடைகளில் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். அது எப்படி என்று கீழே பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பேபிகார்ன்
தேவையான பொருட்கள் :

பேபிகார்ன் – 200 கிராம்,
சோயா சாஸ் – 2 ஸ்பூன்,
கார்ன் ஃப்ளோர் – 2 ஸ்பூன்,
மைதா – 2 ஸ்பூன்,
தக்காளி சாஸ் – 2 ஸ்பூன்,
சில்லி சாஸ் – 1 ஸ்பூன்,
வெங்காயம் – 2,
ப.மிளகாய் – 4,
இஞ்சி – சிறிய துண்டு,
மிளகுத்தூள் – ½ ஸ்பூன்,
அஜினோமோட்டோ – ½ ஸ்பூன், (தேவையானால்),
எண்ணெய் தேவைக்கேற்ப.

செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

* இஞ்சிய துருவிக் கொள்ளவும்.

* பேபி கார்ன் துண்டுகளில் சிறிது உப்பு, மைதா மற்றும் கார்ன் – ப்ளோரை சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

* நன்றாக ஊறிய பேபி கார்னை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும்.

* மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கியது, இஞ்சி துருவல் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* லேசாக வதங்கிய பின் மிளகுத்தூள், சோயா சாஸ், தக்காளி சாஸ், சில்லி சாஸ், உப்பு, அஜினோமோட்டோ சேர்த்து வதக்கி பின் அதில் பொரித்து வைத்த பேபிகார்னை சேர்த்து கொத்தமல்லி இலையை தூவி பறிமாற வேண்டும்.

* சுவையான சில்லி பேபிகார்ன் ரெடி. 201610270744133712 how to make Chilli baby corn SECVPF

Related posts

சாமை கட்லெட்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான ஆலு சீஸ் கட்லெட்

nathan

சிவப்பு அரிசி நட்ஸ் புட்டு

nathan

கேரட் கொத்து சப்பாத்தி

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் மைதா ஸ்வீட் சிப்ஸ்

nathan

பாதுஷா செய்ய இதை படிச்ச போதும்…..

nathan

பொங்கல் ஸ்பெஷல்: சர்க்கரை பொங்கல்

nathan

ஈசி கொத்து  புரோட்டா

nathan

சோயா வெஜ் நூடுல்ஸ் / Soya Veg Noodles

nathan