29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
486041
மருத்துவ குறிப்பு

வயிற்று புண்களுக்கு மருந்தாகும் உருளைக் கிழங்கு

வயிற்று புண்களை உருளைக் கிழங்கு ஜூஸ் எளிதாக ஆற்றுவதை மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

உருளைக் கிழங்கு ஜூஸில் அதிக அளவில் உள்ள ஆன்டிபாக்டீரியல் மூலக்கூறுகளால் வயிற்று புண் ஆறுவது சாத்தியமாகிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூலக்கூறுகள் வயிற்றில் அல்சருக்கு காரணமான பாக்டீரியாவை அழிப்பதுடன் நெஞ்செரிச்சலை போக்கவும் காரணமாகிறது. இதனால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது.

ஆய்வுக்காக பல்வேறு வகையான உருளைக் கிழங்குகள் சேகரிக்கப்பட்டு அதிலிருந்து சாறு எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

இதில் மாரிஸ் பைப்பர் மற்றும் கிங் எட்வர்ட் வகை கிழங்குகள் எதிர்பார்த்த வெற்றியை அளித்துள்ளது. இந்த வகை கிழங்கில் இருந்து எடுக்கப்பட்ட சாற்றில் உள்ள ஒரு வகை பிரத்யேக மூலக்கூறுக்கு உரிமம்(பேடன்ட்) பெறும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது சந்தையில் உள்ள ப்ரோபயாடிக் யோகர்ட் உள்ளிட்ட இணை உணவுகளை போன்று இந்த சாற்றில் இருந்தும் இணை உணவு தயாரிக்கும் எண்ணம் உள்ளது.

இதுகுறித்து நடைபெறும் தொடர் ஆய்வில் மேலும் பல அரிய தகவல்கள் தெரிய வரும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
486041

Related posts

சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க 10 டிப்ஸ்!

nathan

பெண்களுக்கு இன்னல் தரும் மாதவிடாய் வராத நிலை

nathan

சுகப்பிரசவம் நடக்க வீட்டு வேலை செய்யுங்க

nathan

உங்களுக்கு 30 நொடிகளில் ஆழ்ந்த உறக்கத்தைப் பெற வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

பல்லுக்கு கிளிப் அணிந்தவர்கள் கவனிக்க வேண்டியவை -தெரிந்துகொள்வோமா?

nathan

40 வயதில் தொடக்கத்தில் கண்களுக்கு சில எளிமையான பயிற்சிகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உங்களுக்கேற்ற சிறந்த மகப்பேறு மருத்துவரை தேர்ந்தெடுப்பது எப்படி?

nathan

உடல் ஆரோக்கியத்தை காக்க ஆயில் புல்லிங் செய்யுங்க

nathan

இரத்த பிரிவை வைத்தே உங்கள் ஆரோக்கியத்தை அறியலாம்

nathan