201610220743131868 How to make almond burfi SECVPF
இனிப்பு வகைகள்

சூப்பரான பாதாம் பர்ஃபி செய்வது எப்படி

பால் மற்றும் நெய் இல்லாமல் மிகச் சுலபமாக செய்யக்கூடிய இந்த பர்ஃபி, வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது.

சூப்பரான பாதாம் பர்ஃபி செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

பாதாம் – 1½கப்,
சர்க்கரை – 1¼ கப்,
ஏலக்காய் பொடி – ½ டீஸ்பூன்,
தண்ணீர் – 100 மில்லி,
குங்குமப்பூ மற்றும் சீவிய பாதாம், பிஸ்தா – மேலே தூவ.

செய்முறை:

* பாதாமை சிறிது நேரம் நீரில் ஊற வைத்து தோலை உரித்து கொள்ளவும்.

* தோல் நீக்கிய பாதாமை வாணலியில் ஈரம் போக லேசாக வறுத்து பொடி செய்துக்கொள்ள வேண்டும்.

* சர்க்கரையில் தண்ணீர் சேர்த்து நான்ஸ்டிக் வாணலியில் கொதிக்க விட வேண்டும். சர்க்கரை நன்கு கரைந்தவுடன் ஏலக்காய் பொடி சேர்த்து பாதாம் பொடியையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

* பாதாம் கலவை நன்கு கெட்டியாகவும், மென்மையாகவும் சேர்ந்தும் வரும் வரையில் கைவிடால் கிளறி அடுப்பை அணைத்து ஆறவிடவும்.

* ஆறிய பின் அதை நன்கு வெடிப்புகள் இல்லாமல் பிசைந்துக்கொள்ள வேண்டும்.

* பிசைந்த மாவு பட்டர் பேப்பர் அல்லது நெய் தடவிய தட்டில் பரப்பி மேலே பாதாம் துண்டுகள் மற்றும் குங்குமப்பூவை தூவி துண்டுகள் போட்டு மேலும் ஆறியவுடன் காற்று புகாத டப்பாவில் வைத்து பரிமாறவும்.

* இப்போது சூப்பரான பாதாம் பர்ஃபி ரெடி.201610220743131868 How to make almond burfi SECVPF

Related posts

பூந்தி லட்டு எப்படி என்று பார்க்கலாம்.

nathan

பிஸ்கட் சீஸ் சாட்

nathan

தித்திப்பான எள்ளு உருண்டை செய்வது எப்படி

nathan

அக்ரூட் சாக்லேட் ஃபட்ஜ்

nathan

அன்னாசி – வெந்தயப் பணியாரம்

nathan

தித்திப்பான ரசகுல்லா செய்வது எப்படி

nathan

ஆப்பிள் அல்வா

nathan

பூந்தி, லட்டு செய்முறை, எப்படி பூந்தி லட்டு செய்வது , லட்டு செய்முறை

nathan

தேன் மிட்டாய்

nathan