இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை இருக்க வேண்டிய அளவைவிட குறையும்போது இரத்தசோகை ஏற்படுகிறது. ஆரோக்கியமாக வாழும் ஆண்களுக்கு 14 முதல் 16 கிராம்/ டெசிலிட்டர் வரையிலும், பெண்களுக்கு 12 முதல் 14 கிராம்/ டெலிலிட்டர் வரையிலும் ஹீமோகுளோபின் இருக்கும். இது ஆண்களுக்கு 13.5 கிராமுக்கு கீழும், பெண்களுக்கு 12 கிராமுக்கு கீழும் குறைந்துவிட்டால் அந்த நிலைமையை இரத்தசோகை என்கிறோம்.
வரும் அடைந்த பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் 30 முதல் 50 மி.லி. வரை இரத்தமிழப்பு ஏற்படலாம். இதை ஈடுகட்ட போதிய அளவுக்கு சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். இல்லையெனில் இரத்தசோகை ஏற்பட்டு மாதவிலக்கு ஒழுங்கில்லாமல் போகும். இந்த நிலைமை நீடித்தால், திருமணத்திற்கு பிறகு மலட்டுத்தன்மை உண்டாகும்.
கர்ப்பப்பை பலவீனம் அடையும். இதன் விளைவாக கரு தங்குவதில் சிக்கல் ஏற்படலாம். கர்ப்பிணிகளுக்கு 5-வது மாதத்தில் இரத்த சோகை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. காரணம் அப்போதுதான் குழந்தையின் வளர்ச்சி அதிகரிக்கும். இந்த நேரத்தில் கர்ப்பிணிகள் அனைத்து ஊட்டச்சத்துகள் அடங்கிய சரிவிகித உணவைச் சாப்பிட வேண்டியது முக்கியம். கர்ப்பிணிகளுக்கு இரத்த சோகை ஏற்பட்டால் பிரசவத்துக்கு முன்பாகவே கரு கலைந்து விடுவது.
போதிய வளர்ச்சி இல்லாத குழந்தை பிறப்பது, குறைபிரசவம், பொய்யாக பிரசவ வலி தோன்றுவது, நஞ்சுக்கொடி இடம் மாறிவிடுவது பிரசவத்தின் போது தாய் இறந்து விடுவது ஆகிய கொடிய விளைவுகள் ஏற்படலாம். கர்ப்பிணிக்கு வைட்டமின் பி-12 ஃபோலிக் அமிலம் ஆகிய சத்துகளில் குறைபாடு இருந்தால் குழந்தை ஊனமாக பிறக்க வாய்ப்புள்ளது.
பெண்களுக்கு ஒவ்வொரு மாதவிலக்கின் போதும் 20 முதல் 35 மில்லி கிராம் வரை இரும்புசத்து வெளியேறுகிறது. அதேபோல் கர்ப்பிணிகளை பொறுத்தவரை கரு உண்டானதில் தொடங்கி குழந்தைக்கு பாலூட்டும் காலம் வரை 1000 மில்லி கிராம் இரும்புசத்து கூடுதலாக தேவைப்படுகிறது. அதற்கேற்ற வகையில் உணவு சாப்பிட வேண்டும். உணவு என்று சொல்லும் போது இரும்புசத்துள்ள உணவுடன் புரதச்சத்துள்ள உணவையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.
Related posts
Click to comment