உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கும் ஓர் ஆசை நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்க வேண்டும் என்பது தான். அதற்காக பல அழகு பராமரிப்புக்களை பெண்கள் தவறாமல் மேற்கொள்வார்கள். என்ன தான் முகம், கை, கால், தலைமுடிகளுக்கு பெண்கள் பல பராமரிப்புக்களை கொடுத்து வந்தாலும், ஒரு வயதிற்கு பின் பெண்களின் மார்பகங்கள் தொங்க ஆரம்பிக்கும்.
இதற்காக பல பெண்கள் மார்பகங்களை இறுகச் செய்யும் க்ரீம்களைக் கொண்டு மசாஜ் செய்து வருவார்கள். ஆனால் அப்படி கண்ட க்ரீம்களைக் கொண்டு மார்பகங்களை மசாஜ் செய்தால், அதனால் பக்கவிளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதுவே இயற்கை வழி என்றால் எவ்வித பிரச்சனையும் இல்லை.
வாரத்தில் அசிங்கமாக தொங்கும் மார்பகங்களை சிக்கென்று மாற்ற உதவும் ஓர் அற்புத வழியைக் கொடுத்துள்ளது. அது வேறொன்றும் இல்லை ஒரு மசாஜ் தான். அதைப் படித்து பின்பற்றி அழகாக காட்சியளியுங்கள்.
மார்பகங்கள் தளர்ந்து தொங்குவதற்கான காரணங்கள் பெண்களுக்கு பிரசவத்திற்கு பின், இறுதி மாதவிடாய், ஆரோக்கியமற்ற டயட், உடல் பருமன் அல்லது உடல் எடை குறைவு, அசௌகரியமற்ற பிராக்கள், புகைப்பிடித்தல் என்ற பல காரணங்களால் மார்பகங்கள் தளர்ந்து தொங்க ஆரம்பித்துவிடும்.
மசாஜ் செய்ய தேவையான பொருட்கள் தேவையான பொருட்கள்: காப்பர் – 1 டீஸ்பூன் முட்டை வெள்ளைக்கரு – 1 வைட்டமின் ஈ எண்ணெய் – 1 டீஸ்பூன்
மசாஜ் செய்முறை செய்யும் முறை: * முதலில் ஒரு பௌலில் அனைத்து பொருட்களையும் சேர்த்து மென்மையாக கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதனை மார்பகங்களில் தடவி 3-5 நிமிடம் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும்.
* பின்பு 30-40 நிமிடம் அப்படியே ஊற வைக்க வேண்டும்.
* இறுதியில் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். நல்ல மாற்றம் தெரிய, ஒரு வாரம் தொடர்ந்து தினமும் இம்முறையை செய்ய வேண்டும்.
குறிப்பு * இந்த முறைக்கு பயன்படுத்தும் கலவையை, மசாஜ் செய்வதற்கு முன்பு ஃபிரஷ்ஷாகத் தயாரித்து தான் பயன்படுத்த வேண்டும்.
* இந்த முறையை குறிப்பிட்ட நாட்கள் தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை, எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இதை செய்யலாம்.
கர்ப்பிணிகள், புதிய தாய்மார்கள் கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மார்பகங்கள் தொங்க ஆரம்பிக்கும். இருப்பினும் அவர்கள் இம்முறையைத் தவிர்க்க வேண்டும்.