201610210845252706 Sweet potato mixed vegetable adai SECVPF
சிற்றுண்டி வகைகள்

சர்க்கரைவள்ளி கிழங்கு – மிக்ஸ்ட் வெஜிடபிள் அடை

வெஜிடபிளை மட்டும் வைத்து சுவையான சத்தான அடை செய்யலாம். இப்போது இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சர்க்கரைவள்ளி கிழங்கு – மிக்ஸ்ட் வெஜிடபிள் அடை
தேவையான பொருட்கள் :

சர்க்கரைவள்ளி கிழங்கு – ஒன்று
முள்ளங்கி – 2
கேரட் – ஒன்று
வெங்காயம் – இரண்டு
பச்சை மிளகாய் – 4
இஞ்சி – ஒரு துண்டு
மிளகு தூள் – இரண்டு டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
ஆலிங் ஆயில் அல்லது எண்ணெய் – தேவைக்கு

செய்முறை :

* சர்க்கரைவள்ளிக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

* முள்ளங்கி, கேரட்டை துருவிக்கொள்ளவும்.

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ப.மிளகாய், இஞ்சியை அரைத்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் மசித்த சர்க்கரைவள்ளிக்கிழங்கை, துருவிய முள்ளங்கி, கேரட், வெங்காயம், அரைத்த ப.மிளகாய், இஞ்சி, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கொட்டியாக பிசைந்து கொள்ளவும்.

* ஒரு வாழை இலை அல்லது பொலிதீன் ஷீட்ல இந்த பிசைந்த கலவையை தேவையான அளவு உருட்டி கையால் அடை போல தட்டி கொள்ளவும்.

* ஒரு நான் ஸ்டிக் தவாவில் சிறிது எண்ணெய் விட்டு அடையை போட்டு சிறிய தீயில் நிதானமாக இரண்டு பக்கமும் பொன்னிறமாக வரும்வரை வேகவைத்து எடுக்கவும்.

* மிக்ஸ்ட் வெஜிடபிள் அடை ரெடி.

* புதினா அல்லது தேங்காய் சட்னியுடன் சாப்பிடவும்.201610210845252706 Sweet potato mixed vegetable adai SECVPF

Related posts

பாசிப்பருப்பு தோசை

nathan

சம்பா ரவை பொங்கல் செய்ய…!

nathan

கோதுமை ரவை பாயசம்

nathan

குருணை கோதுமைக் களி

nathan

அவல் வெஜ் புலாவ்

nathan

கறி தோசை : செய்முறைகளுடன்…!

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு போண்டா

nathan

ரவை கொழுக்கட்டை

nathan

பச்சை பட்டாணி – கேரட் புலாவ் செய்வது எப்படி

nathan