28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
24 1466754666 8 acnescars
முகப்பரு

முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளைப் போக்கும் அற்புத ஃபேஸ் பேக் பற்றி தெரியுமா?

சரும பிரச்சனை வந்தால், மக்கள் உடனே க்ரீம்கள் அல்லது லோசன்களைக் கொண்டு சரிசெய்ய முயல்வார்கள். இருப்பினும் அடிக்கடி அவற்றைப் பயன்படுத்தும் போது அவை பிரச்சனைகளைப் போக்குமே தவிர, அரிப்பு அல்லது எரிச்சல் போன்ற பக்கவிளைவுகளை உண்டாக்கும்.

ஆனால் இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்ய முயற்சித்தால், அதனால் பக்கவிளைவுகள் ஏதும் நேராது, மாறாக சருமத்தின் ஆரோக்கியமும் பொலிவும் தான் மேம்படும். அந்த வகையில் சரும சுருக்கம், தழும்புகள், முகப்பரு, சரும கருமை போன்றவற்றைப் போக்க ஓர் அற்புதமான ஃபேஸ் மாஸ்க் உள்ளது.

ஃபேஸ் மாஸ்க்கின் நன்மைகள் இந்த ஃபேஸ் மாஸ்க்கை அடிக்கடி போட்டு வந்தால், சருமம் புத்துணர்ச்சியுடனும், மென்மையாகவும் இருக்கும். இந்த மாஸ்க் அதிக மருந்துவ குணம் நிறைந்த இயற்கைப் பொருட்களைக் கொண்டு செய்யப்படுவதால், இதனால் கிடைக்கும் நன்மைகள் நிரந்தரமானதாக இருக்கும்.

தேன் இந்த ஃபேஸ் பேக்கில் உள்ள தேன் ஆன்டி-பாக்டீரியல் தன்மை கொண்டது. மேலும் இது சருமத்தில் ஈரப்பசையைத் தக்க வைத்து, சருமத்தை மென்மையாக்கும்.

எலுமிச்சை சாறு எலுமிச்சையில் இருக்கும் ப்ளீச்சிங் தன்மை, சருமத்தில் இருக்கும் கருமை மற்றும் தழும்புகளைப் போக்கும். மேலும் எண்ணெய் பசை சருமத்தினருக்கு எலுமிச்சை மிகவும் சிறப்பான ஓர் அழகு பராமரிப்பு பொருளாகும்.

மாஸ்க் செய்ய தேவையான பொருட்கள்: தேன் – 1 டீஸ்பூன் பட்டைத் தூள் – 1/2 டீஸ்பூன் ஜாதிக்காய் பொடி – 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

செய்முறை: மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து, பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும். பின் முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை முகத்தில் தடவும் போது கண்களின் மேல் தடவுவதைத் தவிர்க்கவும்.

சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு… ஒருவேளை உங்களுக்கு சென்சிடிவ் சருமம் என்றால், எலுமிச்சை சாற்றினை சேர்க்காமல் இருக்கலாம் அல்லது தேனை சற்று அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் எலுமிச்சை சாறு சருமத்தில் அரிப்பு மற்றும் எரிச்சலை உண்டாக்கும்.

பயன்படுத்தக்கூடாதவர்கள் இரத்த நாளம் சம்பந்தமான பிரச்சனைகளைக் கொண்டவர்கள், இந்த மாஸ்க்கைப் போட வேண்டாம். ஏனெனில் தேன் இரத்த நாளங்களை விரிவடையச் செய்யும். வேண்டுமானால், இந்த மாஸ்க்கில் தேனிற்கு பதிலாக வெள்ளை அல்லது க்ரீன் க்ளே பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறிப்பு இந்த மாஸ்க்கை முகத்தில் தடவிய பின் சிறிது எரிச்சலை உண்டாக்குவது போல் இருக்கும். ஆனால் சிறிது நேரத்தில் அது போய்விடும். மேலும் வாரத்திற்கு ஒருமுறை இந்த மாஸ்க்கைப் போட்டு வந்தால், சரும பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம்.

24 1466754666 8 acnescars

Related posts

மருக்கள் மறைய முகம் பொழிவு பெற சூப்பர் டிப்ஸ்

nathan

முகப்பருவை கட்டுப்படுத்தும் வேம்பு

nathan

க அழகைக் கெடுக்கும் முகப்பருக்களைப் போக்க

nathan

உங்கள் முகம் இயற்கையாகவே ஜொலிக்கனும் என்று ஆசைப்படுகிறீர்களா? அப்போ இத ப்லோ பண்ணுங்க!…

sangika

இந்த ஆரோக்கிய உணவுகள் பிம்பிளை உண்டாக்கும் எனத் தெரியுமா?

nathan

உங்களுக்கு அடிக்கடி முகப்பரு வருவதற்கான காரணம் என்னவென்று தெரியுமா?

nathan

முகப்பரு வடு நீக்க வெந்தயம் பெஸ்ட் :

nathan

வீட்டிலேயே தினமும் அரை மணி நேரம் செலவு செய்தால் போதும் கரும்புள்ளி காணாமல்போகும்……

sangika

முகத்தில் பருக்கள் அதிகமாக உள்ளதா? அதைப் போக்க இந்த மாஸ்க்கை போடுங்க…

nathan