28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
8 23 1466674325
தலைமுடி சிகிச்சை

பிசுபிசுப்பான கூந்தலா? வீட்டிலேயே ட்ரை ஷாம்பு தயாரிக்கலாம்!

தலையின் வேர்கால்களில் இயற்கையாகவே எண்ணெய் சுரக்கும். இது, நம் கூந்தலுக்கு கண்டிஷனராக செயல்புரியும். வெளிப்புற தாக்குதலிலிருந்து பாதுகாப்பு அளிக்கும். ஆனால் இந்த எண்ணெய் மிக அதிகம் சுரந்தால், இதுவே கூந்தல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

பிசுபிசுப்பான கூந்தலால் நிறைய தூசு படியும், பொடுகு அதிகரிக்கும், முடி கொத்து கொத்தாக கொட்டும். கூந்தல் ஒன்றோடு ஒன்று ஒட்டி கூந்தலின் அழகை கெடுக்கும்

இப்படி பிசுபிசுப்பான கூந்தலுக்கு அடிக்கடி தலைக்கு குளிப்பது அவசியம். வாரம் மூன்று முறை தலைக்கு குளித்தால் பிசுபிசுப்பை தடுக்கலாம்.

எண்ணெய் பிசுபிசுப்பான கூந்தல் பெற்றவர்கள் ஷாம்புவை தேர்ந்தெடுப்பது மிக முக்கியம். அதில் சேர்க்கப்படும் கெமிக்கல், இன்னும் கூந்தலை பாதித்து, எண்ணெய் சுரப்பை அதிகப்படுத்திவிடும்.

இதனை எவ்வாறு தடுக்கலாம்? எளிதுதான். நீங்கள் வீட்டிலேயே பக்கவிளைவுகளற்ற ஷாம்புவை தயாரியுங்கள். இது நீர்த்தன்மையற்ற பவுடர் வகையாகும். இவை கேடு தராது. கூந்தலில் அமில-காரத்தன்மையை சமன் செய்யும். எண்ணெய் சுரப்பினை கட்டுப்படுத்தும்.

இந்த இயற்கையான ட்ரை ஷாம்புவை தயாரிக்க சமையல் சோடா, சோள மாவு, கோகோ பவுடர் இந்த மூன்றும் மிக முக்கியம். விலையும் குறைவு. பாதுகாப்பானது.

தேவையானவை : சோள மாவு – 2 டீ ஸ்பூன் சமையல் சோடா – 2 டீ ஸ்பூன் கோகோ பவுடர்- 1 டீ ஸ்பூன் லாவண்டர் எண்ணெய் – 2- 3 துளிகள்.

மேலே கூறியவற்றை எல்லாம் கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளுங்கள். இதனை உபயோகப்படுத்தும்போது தலையில் ஈரமில்லாமல் இருக்க வேண்டும். ஒரு பிரஷினால் இந்த கலவையை தலையின் ஸ்கால்பில் தடவுங்கள்.

5 நிமிடங்கள் கழித்து, அதே பிரஷினால் தலையிலுள்ள கலவையை உதிர்த்துவிடுங்கள். அதிகப்படியான எண்ணெயை இந்த கலவை உறிஞ்சுக் கொள்ளும். பக்க விளைவுகள் தராது. பொடுகு ஏற்படாது. நன்றாக ஒரு மெல்லிய துணி கொண்டு துடைத்துவிட்டால், தலையில் இந்த ட்ரை ஷாம்பு தங்காது.

எண்ணெய் கூந்தல் கொண்டவர்களுக்கு இது நல்ல பலனைத் தரும். நீங்களும் உபயோகித்துப் பாருங்கள்.

8 23 1466674325

Related posts

முடி அடர்த்தியாக வளர…

nathan

கூந்தல் உதிர்வுக்கு காரணமும் – வீட்டு சிகிச்சையும்

nathan

பொதுவாக ஏன் ஆண்களுக்கு அதிகமாக முடி உதிர்கிறது என உங்களுக்கு தெரியுமா??

nathan

பொடுகு காரணமாக முடி விழுவதை நிறுத்த இந்த ஓட்ஸ் முடி பேக்கை முயலவும்.

nathan

உங்களுக்கு தெரியுமா கூந்தல் வறட்சியைப் போக்கும் சிறப்பான சில முட்டை மாஸ்க்குகள்!!!

nathan

கூந்தல் 1 அடிக்கு மேல வளர மாட்டேங்குதா? இதை ட்ரை பண்ணுங்க !!

nathan

மிளகின் மருத்துவ குணங்கள்…

sangika

கூந்தலுக்கு ஊட்டச்சத்தையும் கொடுக்கும் செம்பருத்தி எண்ணெய்

nathan

நீங்கள் Hair style செய்து கொள்வதற்கு முன் இதைப் படியுங்கள்..

nathan