32.5 C
Chennai
Tuesday, Jul 15, 2025
01 sunsamayal chicken soup
சூப் வகைகள்

உடல் ஆரோக்கியத்தை காக்க சூப் குடிங்க

காய்கறித் தோல்களில் தாது உப்புகள், வைட்டமின்கள் மிகுந்து இருப்பதால், அவற்றைக் குப்பையில் தூக்கி எறியாமல் சூப் தயாரித்து சாப்பிடலாம். மூலிகைகள், காய்கறிகள், கீரை வகைகள் என விதவிதமான சூப்கள் தயாரிக்கலாம். சூப் வகைகளை செய்வதும் சுலபம், பலனும் அபாரம்.
உடல் ஆரோக்கியத்தை காக்க சூப் குடிங்க
ஒரு வேளைக்கான உணவின் தேவையை ஒரு கப் சூப் அருந்துவதன் மூலமே பெற முடியும். ஆரோக்கியத்தை விரும்புபவர்களுக்கு மூலிகை சூப், குழந்தைகளுக்குப் பிடித்த சத்தான கார்ன் சூப் என அனைவரும் விரும்பிச் சாப்பிடக்கூடிய சூப் வகைகளைச் செய்து கொடுக்கலாம். பொதுவாக, சூப் பசியைத் தூண்டக்கூடியது.
உணவு உண்பதற்கு அரை மணி நேரம் முன்பு அருந்த வேண்டும். காபி, டீக்கு பதிலாக தானிய சூப் வகைகளைக் குடிக்கலாம். சிறுநீரகக் கோளாறு, அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் மசாலா சேர்ந்த சூப்களை அருந்த வேண்டாம். மற்றபடி காய்கறி, கீரை, மூலிகை சூப்களை சாப்பிடலாம்.
மூலப் பிரச்சனை இருப்பவர்கள், இதய நோயாளிகள், உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் சூப் வகைகளை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், உப்பு, வெண்ணெய் போன்றவற்றை மிகவும் குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும். எடை அதிகரிக்க நினைப்பவர்கள் மட்டும் சூப் வகைகளைக் குறைவாக சாப்பிடலாம்.01 sunsamayal chicken soup

Related posts

சூப்பரான உடுப்பி தக்காளி ரசம்

nathan

சுவையான ஓட்ஸ் – ப்ரோக்கோலி சூப்

nathan

ஓட்ஸ் பீநட் பட்டர் சூப்

nathan

நூல்கோல் சூப்

nathan

ராஜ்மா சூப்

nathan

தேங்காய் பால் சூப்

nathan

சோயா கிரானுல்ஸ் – தக்காளி சூப்

nathan

நண்டு தக்காளி சூப்

nathan

பத்து நிமிட காய்கறி சூப்

nathan