பெட்ரோலியம் ஜெல்லி 150 ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. பெண்களை அழகுபடுத்த இந்த ஜெல்லியில் ஏராளமான குணங்கள்உள்ளது.
வறண்ட சருமத்திற்கு, பாத வெடிப்பிற்கு, கூந்தலுக்கு உதட்டிற்கு என எல்லாவற்றிற்கும் இதனை பயன்படுத்தலாம்.
பெட்ரோலியம் ஜெல்லி விலை குறைவானதே. நல்ல தரமானதா என பார்த்து வாங்குவது அவசியம். இதனை தொடர்ந்து பூசி வருவதால் உங்கள் சருமத்தில் ஏற்படும் மாயத்தை கண்கூடாக பார்ப்பீர்கள். இதனை எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம்.
அடர்த்தியான இமைகள் பெற : கண்கள் அழகாய் இருந்தாலும், அடர்த்தி இல்லாத இமைகள் சின்ன மைனஸ்தான். தினமும் தூங்குவதற்கு முன் பெட்ரோலியம் ஜெல்லியை இமைகளுக்கு பூசி வாருங்கள். இமைகள் அழகாய் வளைந்து இருக்கும். இதனை புருவத்திற்கும் பூசி வந்தால் நல்ல வடிவம் பெற்று புருவங்கள் வளரும்.
பாத வெடிப்பிற்கு : பாதத்தில் ஏற்படும் வெடிப்பில் பெட்ரோலியம் ஜெல்லி செயல்புரிந்து, குணப்படுத்துகிறது. பாதங்களை மிருதுவாக்கும். இரவில் தினமும் பாதத்தில் பெட்ரோலியம் ஜெல்லி பூசி வாருங்கள். ஒரே வாரத்தில் மென்மையான பாதங்கள் கிடைக்கும்.
மேக்கப்பை அகற்ற : மேக்கப்பை அகற்ற கெமிக்கல் கலந்த ரிமூவர் வாங்க வேண்டுமென்பதில்லை. பெட்ரோலியம் ஜெல்லியை உபயோகப்படுத்துங்கள். இதனை முகத்தில் தேய்த்து, ஒரு பஞ்சினால் துடைத்தால், மேக்கப் முழுவதும் நீங்கிவிடும். பின்னர் குளிர்ந்த நீரில கழுவலாம். மேலும் முகம் பிரகாசமடையும். கண்களுக்கு போடும் மஸ்காரா காஜல் அவற்றை நீக்க இவை மிகவும் உபயோகமானதாக இருக்கும்.
வறண்ட கூந்தலுக்கு : உங்கள் கூந்தல் வறண்டு , ஜீவனேயில்லாமல் இருந்தால், பெட்ரோலியம் ஜெல்லி உபயோகப்படுத்திப் பாருங்கள். சிறிது பெட்ரோலியம் ஜெல்லி எடுத்து கூந்தலில் தடவவும். கூந்தல் மென்மையாக பட்டு போலாகிவிடும்.
வாசனை திரவியம் நீடிக்க : பெட்ரோலியம் ஜெல்லி மணிக்கட்டில் தடவி அதில் வாசனை திரவியத்தை ஸ்ப்ரே செய்தால், நீண்ட நேரம் வாசனை உங்கள் உடலில் இருக்கும்.