27.8 C
Chennai
Thursday, Mar 12, 2026
201610180718418938 difference between male and female brains SECVPF
மருத்துவ குறிப்பு

ஆண் பெண் மூளை வித்தியாசம்

மூளை வித்தியாசப்படுவதால்தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாக புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.

ஆண் பெண் மூளை வித்தியாசம்
உலகம் முழுவதுமுள்ள ஒட்டுமொத்த ஆண்களும் பெண்களும் நினைப்பது என்னவென்றால், ஆண், பெண் இருவருக்கும் உடலமைப்புகள்தான் வித்தியாசம். மற்றபடி மனம், மூளை போன்றவை ஒன்றுதான் என்று நினைக்கிறார்கள். உண்மையில் இரு பாலினத்தவருக்கும் உடல் மட்டும் வித்தியாசப்படவில்லை. மூளையும் வித்தியாசப்படுகிறது.

இப்படி மூளை வித்தியாசப்படுவதால்தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாக புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். ஆணின் மூளையும் பெண்ணின் மூளையும் வெவ்வேறு விதமாக வேலை செய்கின்றன என்பதுதான் அவர்கள் சொல்லும் காரணம்.

பெண்களின் மூளை அமைப்பு மூன்று மையங்களை கொண்டதாக இருக்கிறது. முதல் மையம் உணர்ச்சிகளை அப்படியே கிரகித்துக்கொள்ளும் தன்மை கொண்டது. இரண்டாவது மையம் மொழிவளத்துக்கானது. இது வார்த்தைகளையும் உரையாடலையும் ரசிக்கும் தன்மை கொண்டது. மூன்றாவது மையம் முகத்தின் சாயலை கொண்டு ஒருவரை துல்லியமாக எடைபோடும் தன்மை கொண்டது.

ஆண் மூளையிலும் இந்த மூன்று வகையான மையங்கள் உள்ளன. ஆனால், அது வேறுவிதமாக செயல்படுகிறது. ஒரு விஷயத்தை பெண் பேசுவதுபோல் ஆணால் விவரித்து, கொஞ்சம் ‘வளவள’வென்று இழுத்து கூற முடிவதில்லை. தான் உணரும் அந்த உணர்ச்சியை ஒரு பெண்ணைப் போல் ஆணால் மொழியால் விவரிக்க முடிவதில்லை. எதிராளியின் முக அமைப்பை கொண்டு அவர் மனதை புரிந்துகொள்ள முடிவதில்லை.

ஆணுக்கான மூளை அமைப்பு கண்ணில் காணும் காட்சிகளுக்கே முக்கியத்துவம் தருகிறது. அதனால்தான் அவனுக்கு பெண்ணின் கவர்ச்சியான காட்சிகளை பார்த்தால் மட்டுமே மகிழ்ச்சியளிக்கிறது. பெரும்பாலும் அழகான பெண்களையே ஆண்கள் விரும்புவதற்கு மூளையே காரணம். ஆனால், பெண்ணின் மூளை இப்படியல்ல. பெண்ணுக்கு பார்வை இன்பம் என்று ஒன்று இல்லை.

அதனால் பெண்ணுக்கு பார்ப்பதால் மகிழ்ச்சி கிடைப்பதில்லை. பேச்சு மூலம்தான் மகிழ்ச்சியடைகிறது. ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும் ஆணை பெண்களுக்கு பிடிக்கிறது. ஆண் அழகாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இதுபோன்ற அடிப்படையான குணவேறுபாடுகள் ஆண், பெண் இருவருக்கும் உண்டு. இதைப்பற்றி சரியான புரிதல் இருபாலருக்கும் இல்லாததாலே காதலிக்கும் போதும் திருமணத்திற்கு பிறகும் ஏமாற்றம் அடைகிறார்கள்.

ஆண் தன்னிடம் ஆசையாக நாலு வார்த்தை பேசவில்லை என்று பெண் புலம்புவதும், தனது பாலியல் தேவைகளை பெண் புரிந்துகொள்ளவே இல்லை என்று ஆண் நொந்துகொள்வதும் நடந்து கொண்டேயிருக்கிறது. மணவாழ்க்கையிலும் காதலிலும் விரிசல் ஏற்படாமல் இருக்க ஆண், பெண் புரிந்து கொள்ளுதல் மிக மிக அவசியம் என்கிறார்கள் உளவியலாளர்கள். 201610180718418938 difference between male and female brains SECVPF

Related posts

தரமான சானிட்டரி பேட் பயன்படுத்துங்கள்

nathan

பெண்களுக்கு அதிகரித்து வரும் மார்பக புற்றுநோய்

nathan

Male Drinking – What’s the difference between female drinking?|ஆண் குடி – பெண் குடி என்ன வித்தியாசம்…

nathan

தெரிஞ்சிக்கங்க…இரத்தத்தை இயற்கை முறையில் சுத்தப்படுத்தனுமா? இந்த உணவுகளை அவசியம் சாப்பிடுங்க

nathan

மூலிகைப் பொடிகளும், அதன் பயன்களும்

nathan

பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பது பிரச்சனையா?

nathan

உங்களுக்கு முழங்கால் வலி, இடுப்பு வலி ஆயுசுக்கும் வராம இருக்கணுமா?

nathan

இன்சுலின் இல்லாமல் சீனியை கட்டுப்பாட்டில் வைத்திருக்க காலையில் இதனை செய்யுங்கள்!

nathan

ஹெர்னியா எனப்படும் குடலிறக்கப் பிரச்சனைக்கான சில இயற்கை வைத்தியங்கள்

nathan