அன்னவெறுப்பு, வாந்தி, கசப்பு, வாய் நாற்றம், தேகத்தின் நிறக்குறைவு, குளிர், பதற்றம், எரிச்சல், சித்தபிரமை, நா உலறல், மயக்கம், மூர்ச்சை, தலை கனத்தல், தலைவலி, கண்சிவக்குதல்
விழித்தபடியிருத்தல், உடல் நடுக்கம் கொட்டாவி, விக்கல், பல்லைக்கடித்தல்,
சோம்பல் தேகம், கண், நகம், மலம், மூத்திரம், ஆகிய இவைகளில் மஞ்சள் நிறமுண்டாயிருத்தல், தூர்நாற்றம், வாந்தி, புளிப்பு இனிப்பாயிருத்தல், அஜீரணம், வயிறு பொறுமல், பேதி, இருமல், இரைப்பு, கோபம், துக்கம், பயம், வெறித்த பார்வை, வாயும் சுவாசமும் நாறுதல், திடுக்கிடல், என்னும் இக்குணங்களை பித்த நோய் பெற்றுள்ளது.
ஆண்களுக்கு இந்த நோய் வந்தாலும் பெண்களுக்கு இந்த நோய் அதிக அளவில் வருகிறது. அதிகம் காபி, டீ போன்றவை அருந்துவதாலும் பித்த நோய் வரும்.
பித்த நோய் பெண்களை மிகவும் சிரமப்படுத்திவிடும். காலையில் வெறும் வயிற்றில் வாந்தி, உடலில் என்ன செய்கிறதென்றே சொல்ல முடியாத நிலையை ஏற்படுத்தும். பசிக்காது, சரியாக தூக்கம் வராது. தலைசுற்றல் வாந்திவருவது போன்ற நிலை இருந்து கொண்டே இருக்கும்.
இதற்கு சிறந்த மருந்தாக கருதப்படுவது கீழே காணும் மருந்துதான் இதை மிஞ்சிய வைத்தியம் பித்தத்திற்கு எதுவுமில்லை.
சீர் + அகம் = சீரகம். அகத்தை அதாவது நமது இரைப்பையை சீராக இயங்க வைக்கும் ஓர் முக்கியமான உணவு பொருள் சீரகம்.
காரச் சுவையுடைய சீரகம், ஜீரணத்தை தூண்டும் இயல்புடையது. மேலும் பல மருத்துவ குணங்கள் சீரகத்தில் நிறைந்துள்ளது.
சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
பித்த நோய்கள், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், அதிக உடல் சூடு, பசியின்மை இப்படி பல நோய்களுக்கு சீரகம் சிறந்த மருந்தாகிறது.
மேலும் அரைக் கீரைச் சாறில் இஞ்சியை அரைத்துக் குடித்தால் பித்த நோய் குறையும்