ஞ்சாபி சிக்கன் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
கோழிக்கறி – ஒரு கிலோ
பெரிய வெங்காயம் – 4
மஞ்சள்தூள் – அரைத் டீஸ்பூன்
ஏலக்காய் – 5
பட்டை – சிறுதுண்டு
கிராம்பு – 4
பூண்டு – 6 பல்
இஞ்சி – சிறுதுண்டு
தனியா – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
மிளகு – 1 டீஸ்பூன்
பிரிஞ்சி இலை – 2
தயிர் – முக்கால் கப்
நெய் – 150 கிராம்
கொத்தமல்லி – தேவையான அளவு
எண்ணெய் – ஒரு குழி கரண்டி
உப்பு – தேவையான அளவு
தயார் செய்து கொள்ள வேண்டியவை:
கோழிக்கறியினை நன்கு கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு, மிளகாய், மல்லி ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். பட்டை, ஏலக்காய், கிராம்பு, மிளகு ஆகியவற்றைச் சேர்த்து பொடியாக (மசாலா) அரைத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை:
கடாயில் நெய் ஊற்றி சூடேறியதும் அதில் கோழித்துண்டங்களைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியே வைத்துக் கொள்ள வேண்டும்.
கடாயில் என்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரிஞ்சி இலை, அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு மசாலாவினை இட்டு பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
பிறகு வறுத்து வைத்துள்ள கோழித் துண்டங்களைப் போட்டு, மஞ்சள் தூள், தயிரினையும் ஊற்றி, தயிர் மணம் கோழி இறைச்சியில் இறங்கும் வரை மிதமான தீயில் வேகவிட வேண்டும். தேவையான உப்பு சேர்த்து கறி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கறி நன்கு வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள பொடியினைத் தூவி குறைந்த தீயில் மேலும் வேக வைக்க வேண்டும். மசாலாக் கலவை நன்கு கரைந்து, இறைச்சியிலும் படிந்த பிறகு இறக்கி கொத்தமல்லித் தழைத் தூவி பரிமாற வேண்டும்.
சுவையான பஞ்சாபி சிக்கன் ரெடி.