கடினமான வேலை செய்வோர், வெய்யிலில் அலைவோர் எல்லோரும் காட்டன் சட்டை ஒரு வரப்பிரசாதம்.
எப்போதும் மவுசு குறையாத காட்டன் சர்ட்டுகள்
ஆண்கள் அணியும் ஆடைகளில் மிகப்பெரும்பான்மை வகிப்பது சட்டைகளே. அதில் அலுவலகம் போன்ற வேலை நிமித்தமாக செல்லும் இடங்களுக்கு பார்மல்ஸ் என்றும், குடும்பத்துடன் வெளி இடங்களுக்கு செல்லும்போதும், நண்பர்களுடன் வெளியே செல்லும்போதும் அணிவதற்கு கேஷ்வல்ஸ் என்றும் தனித்தனி ரகங்கள் இருக்கின்றன. பொதுவாக காட்டன் சட்டைகள் என்றால் வெய்யில் காலத்தில் உடலுக்கு ஏற்றது என்று சொல்வார்கள்.
உண்மையில் காட்டன் வெய்யிலுக்கும் மட்டும் அல்ல எல்லாவிதமான பருவநிலைக்கும் ஏற்ற ஆடை என்பதுதான் உண்மை. வெய்யில் வெளிச்சூட்டை உடலுக்கு அனுப்பாமல் தடுத்து குளிர்ச்சியை தரும் காட்டன், மழைக்காலங்களிலும், குளிர்க்காலங்களிலும், உடல் சூட்டை தக்கவைத்து ஒரு கதகதப்பை தரும் என்பது இதன் தனிச்சிறப்பு எனலாம்.
எளிமையும் கம்பீரமும் ஒருசேர கிடைப்பது காட்டன் சட்டைகளிடம்தான். காட்டன் துணியின் தன்மைகளில் மிகவும் முக்கியமானதும் பயன் தரக்கூடியதுமான ஒரு அம்சம் அதன் ஈரம் உறிஞ்சும் தன்மைதான். ஒரு காட்டன் சட்டை உலர்ந்த நிலையில் தன் எடையை ஐந்து மடங்கு அதிக ஈரத்தை உறிஞ்சும். இதன் உடல்பயற்சி செய்வோர் காட்டன் உடை அணியும்போது, வெளியேறும் அதிகப்படியான வியர்வை உடலில் தங்காமல் உடனுக்குடன் உறிஞ்சப்பட்டு தோலில் வியர்வை தங்காதவண்ணம் உலர்ந்து உடலுக்கு நோய்கள் வராமல் பாதுகாப்பு தருகிறது. எனவே கடினமான வேலை செய்வோர், வெய்யிலில் அலைவோர் எல்லோரும் காட்டன் சட்டை ஒரு வரப்பிரசாதம் என்று கூறலாம். மேலும் உடலும் ஆடைக்கும் நடுவில் காற்றை தக்கவைப்பதால் அணிந்துகொள்ள மென்மையாகவும் இருக்கிறது.
சிலருக்கும் மிகவும் நெப்பமான சருமம் இருக்கும். அம்மாதிரியானவர்கள், உடலுக்கு உடுத்தும் ஆடைத்தேர்வில் மிகவும் கவனமாக இருத்தல் அவசியம். ஏனென்றால் சில ஆடைகள் உடலுக்கு ஒவ்வொமையை ஏற்படுத்தி தோல்வியாதியில் கொண்டுவிட்டுவிடும். ஆனால் காட்டன் ஆடைகளை பொருத்த அளவில் இந்த பிரச்சனை இல்லை. காட்டன் மிகவும் பாதுகாப்பானது. தோலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் எதுவும் இல்லை அதனால்தான் இதை மருத்துவமனையில் பாண்டேஜ் போன்றவற்றில் பயன்படுத்துகின்றனர். மேலும் குழந்தைகள் ஆடைக்கும் பெரும்பாலும் காட்டன்களையே பயன்படுத்துகின்றனர்.
காட்டன் ஆடை தயாரிக்கும்போது இரண்டு விதமான சீதோஷ நிலைக்கு ஏற்ப வித்தியாசமான முறையில் தயாரிக்கிறார்கள். மிகவும் நெருக்கமாகவும், இருக்கமாகவும் நெய்யப்படும்போது, குளிரை தாங்கக்கூடியதாக திகழ்கிறது. மிகவும் லேசாக இடம் விட்டு நெய்யப்படும்போது, காற்றோடமானதாக இருக்கிறது. காட்டன் துணியை பொருத்தவர்ரை எவ்வளவுதான் இருக்கமாக நெய்தாலும் இழைகளுக்கு இடையே காற்றை தக்கவைத்துக்கொள்வது நிகழும்.
அணிந்துகொள்ள மிகவும் மென்மையாக இருப்பதினால் இது உள்ளாடைகள் செய்ய ஏற்ற ஆடையாக இருக்கிறது. டென்சைல் ஸ்டிரென்த்” என்னும் இதன் இழைகளின் நார்த்தன்மை மிகவும் உறுதியானது. அதுமட்டுமல்லாமல் ஈரமாக இருக்கும்போது காட்டனின் உறுதி 30% அதிகமாகிறது. எனவே பலமுறை தோய்த்தபிறகும் காட்டன் துணிகள் தன் வலுவை இழப்பதில்லை இதன்மூலம் நீண்டகாலம் உழைக்கக்கூடியதாகவும் இருக்கிறது.
எனவே காட்டன் ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, நமது பணத்திற்கும் நம் உடலுக்கும் மதிப்பே ஆகும்.