25.9 C
Chennai
Saturday, Mar 14, 2026
201610170903071562 Tasty nutritious beetroot chapati SECVPF
சிற்றுண்டி வகைகள்

சுவையான சத்தான பீட்ரூட் சப்பாத்தி

பீட்ரூட் உடலுக்கு மிகவும் நல்லது. பீட்ரூட் வைத்து எப்படி குழந்தைகளுக்கு பிடித்தமான சப்பாத்தி செய்யலாம் என்பதை கீழே பார்க்கலாம்.

சுவையான சத்தான பீட்ரூட் சப்பாத்தி
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 2 கப்,
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – நெய் கலவை – தேவையான அளவு.

அரைக்க:

பீட்ரூட் (நடுத்தரமான அளவு) – 1,
சோம்பு – ஒரு டீஸ்பூன்,
மிளகாய்தூள் – ஒரு டீஸ்பூன்,
பூண்டு (விருப்பப்பட்டால்) – 2 பல்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

* அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து, வடிகட்டிக் கொள்ளுங்கள்.

* ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய சாறுடன் கோதுமை மாவு, நெய், உப்பு சேர்த்து தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

* இந்த மாவை வழக்கம்போல சப்பாத்தியாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு எண்ணெய், நெய் கலவை சேர்த்து சுட்டெடுங்கள்.

* அழகிய பிங்க் கலரில் கண்ணைக் கவரும் இந்த சப்பாத்தி, குழந்தைகளுக்கு பிடித்தமான அயிட்டம்.

* பீட்ரூட்டை துருவியும் சேர்க்கலாம்.201610170903071562 Tasty nutritious beetroot chapati SECVPF

Related posts

கார மோதகம்

nathan

பனீர் பாலக் பரோட்டா

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் நூடுல்ஸ் ஸ்டஃப்டு சமோசா

nathan

ரோஸ் லட்டு

nathan

மாலை நேர சிற்றுண்டி தயிர் சேமியா

nathan

கம்பு புட்டு

nathan

மசாலா பூரி

nathan

சில்லி சப்பாத்தி

nathan

சத்தான ஓட்ஸ் – பருப்பு பொங்கல்

nathan