எந்த நிறமும் அழகுதான். அவரவர் எண்ணங்களே அழகினை பிரதிபலிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த டிப்ஸ் அடர் கருப்பாய் இருப்பவரை செக்கச் செவேலென்று மாற்றும் ஒரு மாயாஜால மந்திரம் அல்ல.
ஆனால் கருப்போ, சிவப்போ அல்லது மா நிறமோ எந்த நிறமாய் இருந்தாலும் அதனை மெருகூட்டி மினுமினுப்பை தருவதுதான் இயற்கையான வழியாகும்.
எந்த க்ரீமும், அல்லது பொருட்களும் நமது நிறத்தை தடாலடியாக மாற்றாது என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.
விளம்பரங்களில் வருவதெல்லாம் தங்கள் வணிகத்தை அதிகப்படுத்த கூறும் வடிகட்டிய பொய் தவிர வேறெதுவுமில்லை.
ஆனால் உங்கள் நிறத்தினை அழகு படுத்த முடியும். கருப்பாய் இருந்தாலும், அதில் பளபளக்கும் மென்மையான சருமத்தை பெற்றுவிட்டால், அழகு மிளிரும்.
ஆங்காங்கே இருக்கும் கருமை திட்டுக்கள், ஒரே மாதிரியான நிறம் இல்லாமல் ஒரு இடம் வெளுத்து ஒரு இடம் கருத்தது போல் இருப்பது ஆகியவைதான் சருமத்தை அழகில்லாமல் காட்டும். அவ்வகையில் இந்த குறிப்பு மிகவும் உபயோகமாக இருக்கும்.
அரிசி மாவு ஃபேஸ் பேக் : இந்த குறிப்பில் இடபெற்றிருக்கும் ஃபேஸ் பேக் முகத்தில் படியும் கருமைகளை அகற்றும். நிறத்தினை எடுப்பாய் காண்பிக்கும். பளபளப்பான கவர்ச்சியான சருமத்தை பெறுவது உறுதி. எப்படி இந்த ஃபேஸ்பேக் செய்வது என பார்க்கலாம்.
தேவையானவை : அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாறு – 2 டேபிள் ஸ்பூன் பால் – 1 டேபிள் ஸ்பூன்
இந்த மூன்று பொருட்களுமே உங்கள் முகத்தில் மேஜிக் செய்யும் அருமையானவை. சருமத்தில் இருக்கும் அழுக்கு கருமையை விரட்டியடிக்கும்.
இயற்கையான முறையில் ப்ளீச் செய்யும். சுருக்கத்தை போக்கும். பாதிப்படைந்த சருமத்தை சரி செய்யும். சருமத்தை இறுக்கும். இளமையான அழகை நலக்கு தந்திடும். அரிசி மாவு இறந்த செல்களை அகற்றும் ஸ்க்ரப்பாக செயல்படுகிறது.
செய்முறை :
தக்காளியை மசித்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் மற்ற இரு பொருட்களையும் கலந்து முகம், கழுத்து, கைகளில் தேய்க்கவும்.காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். தினமும் இவ்வாறு செய்து வந்தால், வெறும் மூன்று நாட்களிலேயே மாற்றத்தை காண்பீர்கள்.