29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
1433313003 2384
சைவம்

முருங்கைப்பூ கூட்டு

தேவையான பொருட்கள் :

முருங்கைப்பூ – 1 கப்
சின்ன வெங்காயம் – 10
பச்சை மிளகாய் – 2
பாசிப்பருப்பு – கால் கப்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவைக்கேற்ப
சாம்பார் பொடி – முக்கால் டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
நெய் – அரை டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -1

செய்முறை :

முதலில் முருங்கைப்பூவை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் வாணலியில் நெய்யை விட்டு, அதில் முருங்கைப்பூவைப் போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும். பின் வெங்காயத்தை, நன்றாக நறுக்கி கொள்ளவும்.

மேலும் பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து அரை அவியலாக வேக வைக்கவும். அதில் நெய்யில் வதக்கிய பூ, வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார்பொடி சேர்த்து வேகவிட்டு வெந்ததும் உப்பு சேர்க்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிப்பவற்றை போட்டு தாளித்து கூட்டில் சேர்க்கவும்.

முருங்கைப்பூ கூட்டு தயார்.1433313003 2384

Related posts

மதுரை உருளைக்கிழங்கு மசியல்

nathan

சத்தான பாலக் சப்பாத்தி

nathan

சேனைக்கிழங்கு பொடிமாஸ்

nathan

சுண்டைக்காய் வத்தக்குழம்பு செய்வது எப்படி

nathan

சூப்பரான கத்திரிக்காய் பிரியாணி செய்வது எப்படி

nathan

பேச்சுலர்களுக்கான… பச்சை பயறு குழம்பு

nathan

சோளம் மசாலா ரைஸ்

nathan

தயிர்சாதம் & ஃப்ரூட்

nathan

சூப்பரான கொண்டைக்கடலை குருமா

nathan